என்ன மயிலு ராஜி அடிச்ச அடி வலிக்குதா.. கோமதி எடுத்த அதிரடி முடிவால் ஆடி போய் நிற்கும் மீனா..

pandian stores 2 july 15 episode
pandian stores 2 july 15 episode

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியனிடம் செந்திலின் மாமா எதற்காக கதிரை அப்படி திட்டினீர்கள் என கேள்வி கேட்டு கொண்டு போகிறார்கள் அப்பொழுது பாண்டியன் அவன் பேசிய பேச்சிக்கு வேற என்ன பண்ண சொல்ற என பாண்டியன் கூறுகிறார்.

அதேபோல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது கதிரை திட்டியது தவறு என கோமதியும் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மயில் இதுதான் நேரம் என கொளுத்தி போட பார்க்கிறார். எங்க வீட்டில் எங்க அப்பாவை எதிர்த்து நாங்க பேசவே மாட்டோம். எங்க அப்பாவுக்கு அவ்வளவு மரியாதை கொடுப்போம் என்ன சொன்னாலும் நாங்க செய்வோம் ஆனா இந்த மாதிரி எதிர்த்து பேச மாட்டோம் என கூறுகிறார்.

இதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ராஜி முகத்தை சுளிக்கிறார். அதுமட்டுமில்லாமல் உங்க வீட்டில் நடப்பது போலவே இங்கும் நடக்கும் என எதிர்பாக்காதீங்க ஐந்து விரலும் ஒண்ணா இருக்கிறது கிடையாது. மாமா கதிர திட்டுனாங்க அது அப்பாவும் மகனுக்கும் உள்ள பிரச்சனை நீங்க எதுக்கு தலையிடுறீங்க தேவையில்லாத பிரச்சினையில்  எதுக்கு மூக்கு நுழைகிறீர்கள் என மயிலை கண்டபடிக்கு ராஜி திட்டி விடுகிறார்.

இதனால் மைலின் முகம் வாடுகிறது உடனே மி நீங்க அமைதியா இருக்கங்களா நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சண்டை போட்டு இருக்கீங்க நானே கதிர அவர் திட்டிவிட்டார் என்று சோகத்தில் இருக்கிறேன் என பேச அதற்கும் ராஜி அப்புறம் என்ன அத்தை அவங்க கண்டுபிடிக்க பேசிட்டு இருக்காங்க என்ன பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீங்களா என்பது போல் கேள்வி எழுப்புகிறார்.

அடுத்த காட்சியில் மயில் ரூமில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க சரவணன் வருகிறார் அப்பொழுது இப்படி பண்ணுவாங்க நான் கொஞ்சம் கூட நினைக்கல என பேச ஆமா அந்த ராஜி சின்ன பொண்ணு என்னையே எதிர்த்து பேசுறா இப்படி பேசுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை என சொல்ல அதற்கு சரவணன் அவ என்ன எதிர்த்து பேசினா திட்டும்போது அமைதியா தான் இருந்தா என கூறுகிறார்.

மற்றொரு பக்கம் கோமதி மிகவும் சோகமாக இருக்க நடந்த அனைத்தையும் நானே மாமாவிடம் கூறுகிறேன் நான் தான் ராஜுக்கு திருமணம் செய்து வைத்தேன். கதிருக்கு திருமணம் செய்து வைத்தேன் என உண்மையை நானே கூறுகிறேன் எனக் கூற மீனா அதிர்ச்சடைகிறார் நீங்க அசால்டாக சொல்லிவிடுங்கள் அப்ப இவ்வளவு நாளா ஏன் மறைச்சீங்க என்று கேள்வி வரும் அப்ப நீங்களும் உடந்தையா என்னையும் ராஜியையும் கேள்வி கேட்பாங்க அந்த புள்ளையோட வாழ்க்கையை நினைத்து பார்த்தீர்களா எனக் கூற இத்துடன் எபிசோட் முடிகிறது.