மூர்த்தி கதிருக்கு இடையே விரிசலை உண்டாக்கிய முல்லையின் அம்மா.! நாரதர் வேலை சிறப்பா முடிஞ்சுது.!

kathir
kathir

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே  நன்கு பிரபலமடைந்துள்ளது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் கதையை நகர்த்தி வருகிறார்கள் இந்த நிலையில் இன்றைய எபிசோடில் தனம் கதிரையும் முல்லையையும் உள்ளே படுத்துக்க சொல்லிவிட்டு நான் வெளியே படுத்து கொள்கிறேன் என கூறுகிறார்.

கதிர் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்ன இப்படி சொல்றீங்க, நீங்க எப்படி கீழே படிப்பீங்க நீங்க உள்ள படுத்துக்கோங்க நான் அண்ணன் வந்ததும் கதவை திறந்து விடுகிறேன் எனக்கு கூறுகிறார் ஆனால் வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் நீங்க போய் தூங்குங்க என தனம் கூறிவிட்டு வெளியே வருகிறார்.

முல்லையும் கதிரும் படுப்பதற்கு முன்பு எதுவோ தப்பா இருக்கு உங்க அம்மா ஏதாவது சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் என கதிர் முல்லை இடம் கூறிக் கொண்டிருக்கிறார். தனம் வெளியில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார் உடனே மூர்த்தி வெளியே வந்து என் அழுது கொண்டு இருக்க  தனம் என மூர்த்தி பேசுகிறார்.

என்ன ஆச்சு தனம் உங்க அம்மா நினைப்பு வந்துடுச்சா வீட்டுக்கு போகணுமா நான் வேணா வர சொல்லட்டுமா என கேட்க நான் என்ன சின்ன குழந்தையா அம்மாவ பாக்கணும்னு அடம் பிடிக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நாம இங்கிருந்து போயிடலாமா என கேட்கிறார் தனம். அதற்கு மூர்த்தி அதிர்ச்சிஅடைகிறார். ஏன் ஏதாவது யாராவது சொன்னாங்களா என மூர்த்தி கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என கூறிவிட்டு பிறகு கதிரின் மாமியார் எதற்கெடுத்தாலும் குத்தி காமிக்கிறாங்க.

முல்லைக்கும் கதிருக்கும் நாம ஏன் பாரமா இருக்கணும் அவங்க அவங்க லைஃப பாத்துப்பாங்க நாம இங்க இருந்து போயிடலாம் என கூறுகிறார். உடனே மூர்த்தியும் சரி போயிடலாம் என கூறிவிடுகிறார் அடுத்த நாள் காலையில் தனம் மூர்த்தியை பார்த்து சைகை காமிக்க உடனே பேக்கை எடுத்து அதில் துணைமணியை எடுத்துக் கொண்டு கிளம்ப போகிறார்கள்.

முல்லையின் அம்மா தூங்குவது போல் நடித்து இவர்கள் கிளம்புவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிளம்பும் நேரத்தில் எதற்காக எங்க போறீங்க என கதிர் கேட்க உடனே தனம் எங்க அம்மா வீட்டுக்கு போறோம் கொஞ்ச நாள் அங்கு இருந்துட்டு வரோம் எனக் கூற அதற்கு கதிர் அண்ணன் எப்படி ஒத்துகச்சி அண்ணன் எப்படி அங்க வரும் இதுல ஏதோ ஒரு தப்பு இருக்கு என கதிர் கண்டுபிடித்து விடுகிறார்.

தனம் மற்றும் மூர்த்தி கிளம்பும்பொழுது கதிர் கூப்பிட்டு நீங்க எங்கேயும் போகக்கூடாது இங்க தான் இருக்கணும் நீங்க இல்லாம நாங்க இங்க என்ன பண்ண போறோம் என கதிர் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் முல்லை என்னோட அம்மா ஏதாவது சொன்னாங்களா என்ன கேட்டுக் கொண்டிருக்கிறார் அதெல்லாம் ஒன்னும் இல்ல, சித்தி எல்லாம் எதுவும் சொல்லல என கூற இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.