பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வளைகாப்பிற்கு ஒவ்வொரு வீடாக சொல்லிக் கொண்டு வருகிறார். அப்பொழுது ஜனார்த்தனன் வீட்டில் சொல்லும் பொழுது நிறைய செலவாகுமே என்ன பண்ணுவீங்க என கேவலமாக ஜனார்த்தனன் பேசுகிறார். மேலும் கண்ணன் ஐஸ்வர்யா ஆகியர்கள் செய்யும் பிரச்சனைகள் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
அதேபோல் ஜனார்த்தனன் ஜீவாவிடம் பிசினஸை கொடுத்துவிட்டு அதில் சும்மா மூக்கை நுழைத்துக் கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது ஜீவாவிற்கு. இதனால் தற்பொழுது புது பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருவது. இந்த ப்ரோமோ வீடியோவில் மீனாவின் தங்கையின் கணவர் திடீரென கயல் பாப்பாவை தூக்கிக் கொண்டு எந்த பள்ளியில் சேர்ப்பது என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு உடனே ஜனார்த்தனன் திருச்சியில் நல்ல பள்ளிகள் நிறையாக இருக்கிறது அங்கு சேர்க்கலாம் என இருக்கிறேன் என ஜனார்த்தனன் கூறுகிறார் அதனால் ஜீவ அதிர்ச்சடைகிறார் அதுமட்டுமில்லாமல் மீனா இவர் டெய்லியும் திருச்சிக்கும் இங்கேயும் போயிட்டு போயிட்டு வருவாளா என தன்னுடைய அப்பாவிடம் கேள்வி எழுப்புகிறார்
சட்டென எழுந்து செல்கிறார் ஜீவா பிறகு கொஞ்சம் நேரம் கழித்து தன்னுடைய மாமனார் ஜனார்த்தனையிடம் முதலில் பிசினஸ் நீங்களே பாத்துக்கங்கன்னு சொன்னீங்க ஆனா எல்லாம் முடிவையும் நீங்கள்தான் எடுக்குறீங்க அப்புறம் எதுக்கு என்ன பிசினஸ் பார்த்துக்குங்கன்னு சொல்லணும். அது உங்களுடைய இஷ்டம் ஆனால் என்னுடைய மகளுடைய முடிவில் நீங்க யாரும் தலையிடக் கூடாது என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என ஜனார்த்தனன் மூஞ்சில அடித்தது போல் ஜீவா பேசி விடுகிறார்.
எவ்வளவு நாள் தான் ஜீவாவும் பொறுமையாக இருப்பார் ஆனால் இன்று எரிமலையாக வெடித்து விட்டார். இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.