பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணன் கறி கடைக்கு வந்துள்ளார், அங்கு கறியின் ரேட்டை விசாரித்ததும் ஆயிரம் ரூபாய் எனக் கூறுகிறார்கள் அதற்கு கண்ணன் அதிர்ச்சி அடைகிறார் நம்மகிட்ட காசு கம்மியா இருக்கு எப்படி ஒரு கிலோ வாங்க முடியும் என அரை கிலோ வாங்குகிறார். பின்பு கண்ணன் தன்னுடைய அண்ணன் இவ்வளவு காசு போட்டா கறி வாங்கி கொடுத்தது என அதிர்ச்சி அடைகிறார். மட்டனை இவ்வளவு விலை விக்குது என கண்ணன் புலம்பி கொண்டு போகிறார்.
அடுத்ததாக மெடிக்கலுக்கு சென்று மாத்திரை வாங்குவதற்கு எவ்வளவு ஆகும் என கேட்கிறார் அதற்கு மெடிக்கலில் 4000 க்கும் மேல் ஆகும் என கூறுகிறார்கள். அதற்கு அவ்வளவு ஆகுமா நல்லா பாருங்க என கண்ணன் கூற அவ்வளவுதான் தம்பி ஆகும் என மெடிக்கலில் கூறி விடுகிறார்கள் உடனே 15 நாள் மாத்திரை எவ்வளவு ஆகும் என கேட்க 2900 ஆகும் என கூறுகிறார்கள். உடனே கண்ணன் கார்டை சுவைப் பண்ணி பாருங்க அமௌன்ட் இருந்தா மருந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறுகிறார் ஆனால் கார்டில் அமௌன்ட் இல்லை உடனே கண்ணன் மூன்று நாளைக்கு மட்டும் மாத்திரை கொடுங்க என வாங்கிக் கொண்டு செல்கிறார்.
அடுத்த காட்சியில் ஜனார்த்தனன் மேனேஜர் அவரிடம் வந்து சுப்பையா ஓடிப்போனதை கூறிக் கொண்டிருக்கிறார் ஜனார்த்தனன் மனைவி அவரிடம் என்னாச்சு என கேட்க அதற்கு சுப்பையா சீட்டு பணத்தில் பிரச்சனையை சரி செய்ய பணம் கேட்டிருந்தார் அதை போய் மாப்பிள்ளை இடம் கேட்டுள்ளார் அதற்கு மாப்பிள்ளை பணமும் கொடுக்காமல் அரசியினை சப்ளை பண்ண வேண்டாம் என கூறிவிட்டாராம் அது ரொம்ப நல்லதா போச்சு இப்ப என்னன்னா சீட்டு பணம் வாங்கின யாருக்கும் பணம் கொடுக்காமல் சுப்பையா ஓடிட்டானா எனக் கூற அதற்கு அவரின் மனைவி நல்ல வேலை மாப்ள செஞ்சது நல்லதா போச்சு என கூறுகிறார்கள். உடனே இதற்கு முன்பு பணம் கொடுத்திருந்தீங்களா என கேட்க கொடுத்திருந்தேன் ஆனா அந்த பணத்திற்கும் மாப்பிள அரிசியா வாங்கி போட்டு எல்லாத்தையும் சரி செஞ்சுட்டார் என கூறிக் கொண்டிருக்கிறார் ஜனார்த்தனன்.
மாப்பிள்ளைய நான் புரிஞ்சுக்காம பேசிட்டேன் மாப்பிள்ளை மட்டும் இப்படி முடிவு எடுக்கலன்னா எனக்கு பல லட்சம் நஷ்டமா இருக்கும் என ஜனார்த்தனன் கூறி வருத்தப்படுகிறார் உடனே மீனா இப்ப நல்லா சொல்லுங்க அப்பா எவ்வளவு அசிங்கப்படுத்தினீங்க என் புருஷனை என கவுண்டர் கொடுத்து கொண்டு இருக்கிறார். அவனுக்கு ஏதோ பிசினஸ் தெரியாத மாதிரியும் இப்பதான் புதுசா கத்துக்கிற மாதிரி நடத்தினீங்களே. அங்கு இருக்கும்போது பேங்க் விஷயம் என அனைத்து விஷயத்தையும் மாமா ஜீவா கிட்ட கேட்டு தான் செய்வார் அவனுக்கு இந்த பிசினஸ் நல்லா தெரியும்பா.
அந்த வீட்டில பண விஷயம் என எல்லாத்தையும் ஜிவா கிட்ட கேட்டு தான் செய்வார், இங்க எல்லா வேலையும் ஜீவா கிட்ட கொடுத்துட்டு திருப்பி திருப்பி அவன இன்சல்ட் பண்ணாதீங்க அப்பா அவர் ரொம்ப வருத்தப்படுவான் அவ்ளோ தான் நான் சொல்லுவேன் என் மீனா கூறுகிறார். அடுத்த காட்சியில் கண்ணன் வீட்டிற்கு வருகிறார் அங்கு மட்டனை தூக்கி பார்த்து மட்டன் என்ன கா கிலோ வா ஐஸ்வர்யாவின் சித்தி அசிங்கப்படுத்துகிறார். அதுமட்டுமில்லாமல் மாத்திரையும் மூணு நாளைக்கு தான் வாங்கிட்டு வந்திருக்கியா என ஐஸ்வர்யா கேட்க ஸ்டாக் இல்லை எனக் கூறி சமாளிக்கிறார். ஐஸ்வர்யாவின் சித்தி பாண்டியன் ஸ்டோர் குடும்பம் கஞ்ச குடும்பம் என கூற உடனே கண்ணன் கோபப்பட்டு எங்க அண்ணன் வாரத்துக்கு மூணு கிலோ மட்டன் எடுப்பார் அது மட்டும் இல்லாமல் சிக்கன், பிஷ் என எல்லாத்தையும் எடுப்பார் என கூற அண்ணன் எடுப்பாரு நீ என்னத்த எடுத்த எனக் கூறுகிறார் சித்தி.
அடுத்த காட்சியில் ஜீவா வருகிறார் அப்பொழுது ஜனார்த்தனன் நீங்க எடுத்த முடிவு சரிதான் மாப்பிள்ளை என சுப்பையா பிரச்சனையை கூறுகிறார் அதற்கு சுப்பையா அரஸ்ட் ஆகிவிட்டார் என ஜீவா கூற அடுத்ததாக சிதம்பரமும் சரியில்லை என கூறிக் கொண்டிருக்கிறார் அதற்கு ஜனார்த்தனன் ஒரு முற தப்பு பண்ணா எல்லாரும் தப்பு பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது எங்களுக்குள்ள இருக்கிற பழக்க வழக்கம் வேற அதனால வேணாம்னு சொல்லாதீங்க மாப்பிள எதாவது தப்பு செஞ்சா சொல்லுங்க நானே கேட்கிறேன் என கூறுகிறார்.
அடுத்த காட்சியில் தனம் ஐஸ்வர்யா சாப்பிட்டாரா இல்லையா என பீல் செய்து கொண்டிருக்கிறார், உடனே முல்லை அவர்கள் வீடியோவில் நல்லா இருப்பதாக போட்டுள்ளதை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு மட்டன் குழம்பு எடுத்து செய்ததையும் அனைத்தையும் வீடியோவாக போட்டுள்ளார் என கூறிக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.