Pandian stores : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரசாந்த் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுக்கிறார் அதில் கதிர், ஜீவா, இருவரும் தன்னை தாக்கியதாகவும் இருவரும் சொத்து கேட்டு ஜனார்த்தனனை மிரட்டியதாகவும் ஜனார்த்தனன் ஒரு பங்கு தருவதாக கூறினார் ஆனால் அது போதாது என வாக்குவாதம் முத்தியதால் ஜனார்த்தனையை பலமாக அடித்ததாகவும் உடனே தடுக்க சென்ற எண்ணெயும் அவர்கள் வெட்டியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் பேசிக் கொண்டிருந்ததை மீனா பார்த்துக் கொண்டிருக்கிறார் உடனே மீனா தன்னுடைய அம்மாவுக்கு டீ கொடுக்கிறார் டீ வேண்டாம் என முதலில் கூறிய மீனாவின் அம்மா பிறகு குடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு நாங்க என்ன துரோகம் செஞ்சோம் அவங்க குடும்பத்துக்கே நல்லது தானே செஞ்சோம் இப்படியா கண்ணுமுன்னு தெரியாம அடிப்பாங்க என்று மீனாவின் அம்மா மீனா விடம் அழுது கொண்டிருக்கிறார்.
உடனே அந்த சமயத்தில் போலீஸ் வந்து நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என கேட்க நான் தான் சொல்லிட்டேனே எல்லாத்தையும் அவங்க ரெண்டு பேரும் தான் கண்டிப்பா இத செஞ்சி இருப்பாங்க எந்த கோர்ட்டில் வேணாலும் வந்து நான் சாட்சி சொல்கிறேன் என மீனாவின் அம்மா ஆவேசத்துடன் பேசுகிறார்.
அடுத்த காட்சியில் பாண்டியன் ஸ்டோர் வீட்டில் அனைவரும் அழுது கொண்டிருக்க ஐஸ்வர்யாவின் சித்தி டீ போட்டுக் கொடுத்து அனைவரையும் குடிக்க சொல்கிறார். ஆனால் அவர் யாரும் குடிக்கவில்லை உடனே பிரசாந்த் பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார் அவன் இப்படி பண்ணுவான் நான் கொஞ்சம் கூட நினைக்கல என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தனமும் வீட்டு கிரகப்பிரவேசத்திலேயே பிரச்சனை பண்ண பார்த்தான் அதை ஞாபகம் வைத்துக்கொண்டு தான் இப்ப பழி வாங்கிட்டான் என கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் மூர்த்தி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது கண்டிப்பாக எப்படி இருந்தாலும் கதிரையும் ஜீவாவையும் வெளியே எடுத்து விடுவோம் என ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்கள். உடனே மல்லி வீட்டிற்கு வந்து உங்கள் ஒருத்தரை கூட நான் சும்மா விட மாட்டேன் அவனுங்க ரெண்டு பேரும் ஜெயில்ல தான் கடக்கணும் என் சொத்த அம்புட்டையும் வித்தாவது ஜீவாவையும் கதிரையும் வெளியே எடுக்க விடமாட்டேன் என மிரட்டி விட்டு செல்கிறார் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற மூர்த்தி கதிர் மற்றும் ஜீவாவை பார்க்க நின்று கொண்டிருக்கிறார் அப்பொழுது வக்கீலை ஏற்பாடு செய்து விட்டேன் கண்டிப்பாக உன்னை வெளியே எடுத்து விடுவேன் என ஆறுதல் கூறுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.