கண்ணன் ஐஸ் விஷயம் தெரிந்து கொந்தளித்த மூர்த்தி.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்

pandian-store-episode-may8
pandian-store-episode-may8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மூர்த்தி, தனம், முல்லை மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது கதிர் வருகிறார். அவர் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு பணம் கொடுக்க முடியாது அண்ணா எனக் கூறுகிறார் செட்டில்மெண்ட் பண்ண வேண்டியதை கொடுக்க வேண்டியது இருந்தது அதனால் பணம் கொடுப்பதற்கு கொஞ்ச நாள் ஆகும் என கூறுகிறார் அதெல்லாம் நான் உன்கிட்ட கேட்கவே இல்லை நீ என்னைக்கும் இந்த மாதிரி சொல்ல மாட்டியேடா திடீர்னு ஏன் இப்படி சொல்ற அதான் எனக்கு கேட்கணும்னு தோணுது எனக்கு கூறுகிறார்.

ஹோட்டல் கொஞ்சம் நஷ்டமாக போவதாக கூறுகிறார் இதனால் மூர்த்தி அதை கொஞ்சம் சீக்கிரம் சரி செய் என சொல்லிவிட்டு அனைவரும் சாப்பிட கிளம்புகிறார்கள் அப்பொழுது முல்லை கதிரிடம் ஏன் அண்ணன் கிட்ட பொய் சொன்னீங்க நீங்க உண்மையை சொல்லி இருக்கலாம் இல்ல என்னைக்காவது ஒரு நாள் தெரிஞ்சதுநா ரொம்ப கஷ்டப்படுவாங்கல்ல அப்பவே தெரிஞ்சிருந்தா நாங்களும் உதவி இருப்போம் நினைப்பாங்க என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா பெட்டில் அமர்ந்தபடி கண்ணனை வெகு வேலை வாங்குகிறார் அதுமட்டுமில்லாமல் கடைசியாக மொபைலை சார்ஜ் போட சொல்லி அரை மணி நேரம் கழித்து எடுத்துக் கொண்டு வா என்று கூறும்பொழுது கண்ணன் டென்ஷன் ஆகி கத்துகிறார் .அதேபோல் கதிர் முல்லை இருவரும் வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது கண்ணனும் ஐஸ்வர்யாவும் நாங்களே சமாளிச்சுக்கிறோம் என்று தானே போனாங்க அப்புறம் ஏன் இப்படி எல்லாம் செய்றாங்க என முல்லை கேள்வி கேட்க அதற்கு கதிர் சின்ன சிறுசங்க என்ன செய்யணும் தெரியல அதான் எப்படி இருக்காங்க என்ன சப்போர்ட் செய்கிறார் கதிர்.

அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா நாளைக்கு லீவு போட முடியுமா கண்ணா எனக் கேட்க கண்ணன் அது ரொம்ப கஷ்டம் ஏற்கனவே ரெண்டு மூணு நாள் லீவ் போட்டுட்டேன் எனக் கூற அதனால் கோபித்துக் கொண்டு ஐஸ்வர்யா படுத்து கொள்கிறார். அடுத்த காட்சியில் மூர்த்தி பேப்பரை எடுத்து டேபிளில் போட்டுவிட்டு உட்காருகிறார் பிறகு அவங்க ரெண்டு பேரும் ஏதோ ஆரம்பிச்சு இருக்காங்கலாமே என யூடியூப் விஷயம் பற்றி கேட்க முல்லையும் அவரிடம் வீடியோவை காட்டுகிறார் இதனால் கடுப்பான மூர்த்தி இதெல்லாம் செய்யக்கூடாது என நீங்க தான் யாராவது புரிய வைக்கணும்.

வீட்டில் நடக்கிறது எல்லாத்தையும் எதுக்காக மத்தவங்க கிட்ட சொல்லணும் அதனால பரிட்சையா வைக்கிறாங்க இல்ல எக்ஸாம் தான் எழுத போறாங்களா என மூர்த்தி கோபப்பட்டு பேசுகிறார் இதைப் பற்றி ஐஸ்வர்யா அவளிடம் கூறினால் எடுத்து எரிஞ்சு பேசுவாள் எனக் கூற அதற்கு மூர்த்தி அவர்களிடம் பேச வேண்டாம் கண்ணனிடம் பேசி புரிய வையுங்கள் எனக் கூறுகிறார் மூர்த்தி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.