பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணன் கிரெடிட் கார்ட் மூலம் பல பொருட்களை வாங்கி கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார். இந்த சமயத்தில் பல லட்சம் செலவு செய்து வளைகாப்பை ஐஸ்வர்யா நடத்த வேண்டும் என திட்டமிட்டு கடனையும் வாங்குகிறார்கள். இவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்து வருகிறார் ஐஸ்வர்யாவின் சித்தி ஆனால் இதற்கு முன்பு கிரெடிட் கார்டில் பணம் எடுத்ததை ஐஸ்வர்யா தன்னுடைய சித்தியிடம் கூறவில்லை.
இந்த நேரத்தில் பணம் கட்ட சொல்லி இரண்டு மூன்று தடவை பேங்கில் இருந்து வந்தார்கள் ஆனால் சரியான ரெஸ்பான்ஸ் பண்ணாமல் இருந்து வந்துள்ளார் கண்ணன். இந்த முறை வீட்டிற்கு வந்துள்ளார்கள். பணத்தை கொடுக்கிறியா இல்ல உன் பொண்டாட்டிய தூக்கிக்கிட்டு போகட்டுமா என கண்ணனை பார்த்து கேள்வி கேட்கிறார் அதனால் கண்ணன் கோபப்பட்டு அடிக்க போனார் அதற்குள் பேங்காரர்கள் இரண்டு பேரும் கண்ணனை துவைத்து எடுக்கிறார்கள்.
அந்த சமயத்தில் கதிர் வருகிறார் நடந்த அனைத்தையும் ஐஸ்வர்யாவும் சித்தியும் உளறி விடுகிறார் கண்ணன் அடி வாங்கிக் கொண்டு வீட்டில் ஒளிந்து இருக்கிறார். பிறகு ஐஸ்வர்யாவும் உண்மையை ஒப்புக் கொள்கிறார் கண்ணன் வெளியே வந்த பிறகு கதிர் கண்ணனை பார்க்கும் பொழுது காயங்கள் அதிகமாக இருக்கிறது இதனால் கோபப்பட்ட கதிர் யார் என்று கேட்டா டீக்கடையில் அந்த பேங்காரர்கள் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது கதிர் அவர்களிடம் பணம் கேட்க வந்த அடிப்பீங்களா பொண்ணுங்கள வேற தப்பா பேசுவீங்களா என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த கதிர் பேங்க்காரர்களை அடித்து துவைத்து எடுக்கிறார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவை ஐஸ்வர்யாவின் சித்தி எவ்வளவு தாண்டி கடன் வாங்கி வச்சிருக்க. இவங்க பரவால்ல அடிக்கறதோட விட்டாங்க நான் கடன் வாங்கின இடத்துல என்னென்னமோ பேசுவாங்களே.
பணத்தை ஒழுங்கா குடுத்துடு இப்பவே இல்லன்னா நான் உன்னை கைய காமிச்சிட்டு நான் பாட்டு போயிட்டே இருப்பேன் என் வேலையை பார்த்துகிட்டு என ஐஸ்வர்யா சித்தி ஐஸ்வர்யாவை பார்த்து நாக்கை பிடுங்குவது போல் கேள்வி கேட்கிறார். அதுமட்டுமில்லாமல் பணத்தை வாங்கிக் கொடுத்ததால் என் வாழ்க்கையே போகப்போகுது என சித்தி அழுது கொண்டு ஐஸ்வர்யாவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த காட்சியில் கண்ணன் நடத்தும் வளைகாப்பிற்கு கதிர் முல்லை தனம் என அனைவரும் கிளம்பி விட்டார்கள் ஆனால் அண்ணன் மூர்த்தி கிளம்பாமல் இருக்கிறார் பிறகு அனைவரும் சொல்லி கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.