அடங்காத ஐஸ்… அசிங்கப்பட்டு நிற்கும் ஜீவா… ஒரே கேள்வியால் அதிர்ச்சியான மீனா.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்…

pandian-store-episode
pandian-store-episode

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஜனார்த்தனன் மற்றும் அவரின் மனைவி என மூவரும் உட்கார்ந்து கயல் பாப்பாவிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இது என்ன என பொருளைக் காட்டி கேட்க கயல் பாப்பா சரியாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் ஜீவா வருகிறார் அவரிடமும் கயல் பாப்பா கரெக்டாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் ஜனார்த்தனனுக்கு ஒரு கால் வர அது யார் என்று கேட்க உடனே குடோன் பக்கத்துல இருக்கிற இடத்தை வித்து விடலாம் என சொல்லி இருந்தேன் அதற்காக கேட்கிறார்கள் என கூறுகிறார் ஜனார்த்தனன்.

ஆனால் ஜீவா வாய் வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் இப்ப ஏன் அதை விக்கிறீங்க அந்த இடத்துல நல்லா விலை ஏறிக் கொண்டிருக்கிறது. எனக் கூற அதற்கு இல்ல மாப்பிள சும்மா ஏன் வச்சுக்கிட்டு அதை பாதுகாத்துக்கொண்டு வித்திடலாம் என ஜனார்த்தனன் கூறுகிறார். ஆனால் ஜீவா இப்போதைக்கு ஏன் வித்து கிட்டு பேசாம லீசுக்கு விடலாம் அப்புறம் நல்ல விலைஎருச்சினா வித்துக்கலாம் என கூறஅதற்கும் ஜனார்த்தனன் முடியாது வித்துடலாம் நீங்க தேவை இல்லாம மண்டையை போட்டு குழப்பிக்காதீங்க கூறுகிறார் ஜீவாவிடம்.

மறுபடியும் ஜீவா அவமானப்படுவதால் எழுந்து செல்கிறார் அடுத்த காட்சியில் முல்லை மற்றும் தனம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தை உதைக்கிறது என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மூர்த்தி வருகிறார் எப்ப பாரு சாம்பார் தான் சாப்பிடுவீங்களா மட்டன் எடுத்துட்டு வந்து இருக்கேன் சமைத்து சாப்பிடுங்க என கூற அதெல்லாம் முடியாது மாமா நைட்டு சமைச்சுக்கலாம் என தனம் கூறுகிறார். ஆனால் மூர்த்தி நானே சமைக்கிறேன் என சமையல் கட்டுக்கு சென்று சமைத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா தன்னுடைய யூடியூப் சேனலுக்கு பேனை வைத்து வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் கண்ணன் வருகிறார் அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்தியா என கேட்க பணத்தை எடுத்துக் கொடுக்கிறார் ஆனால் அண்ணனிடம் பணம் வாங்கியது நினைத்து வருத்தப்படுகிறார் கண்ணன். அதுமட்டுமில்லாமல் வளைகாப்பை க்ராண்டாக நடத்த வேண்டும் என ஐஸ்வர்யா கூற அதற்கு பணத்திற்கு எங்கே போவது மறுபடியும் அண்ணனிடம் கேட்க முடியாது என கூறி விடுகிறார் கண்ணன்.

அதற்கு ஏதாவது வழி கிடைக்கும் என ஐஸ்வர்யா கூறிவிட்டு செல்கிறார் அடுத்த காட்சியில் ஜீவா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். பிறகு மீனா ஜீவாவை சாப்பிடுவதற்கு கூப்பிட வருகிறார் அவரிடம் ஜீவா மாமா எதுக்கு முடிவை எடுத்துட்டு என்கிட்ட கேக்கணும் அப்புறம் ஏன் மாப்பிள்ளை வரல அங்க வரலைன்னு கூறவேண்டும் என மீனாவை பார்த்து கேள்வி எழுப்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.