பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையை தள்ளிவிட்ட ரவுடியை கதிர் பொளந்து கட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் அனைத்து நபர்களையும் அடித்து துவம்சம் செய்து விட்டு தலையில் கல்லை போட்டுக்கொள்ள முயற்சி செய்கிறார். அந்த சமயத்தில் ஜீவா வந்து தடுத்து விடுகிறார். விடு அண்ணா இவனால தான் முல்லை அவ்வளவு கஷ்டப்பட்டா இதுக்கு முன்னாடி இவனால தான் பிரச்சனை பண்ணி ஹோட்டல் மூடனோம் மறுபடியும் இவன் வந்து பிரச்சனை பண்றான் அதனாலதான் லேசா தட்டுன அதுக்கு என்கிட்ட மோத வேண்டி தானே அத விட்டுட்டு முல்லைய தள்ளி விட்டுட்டா என கூறுகிறார் கதிர்.
உடனே ஜீவா இவனை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போக பாக்குறியா இன்னும் நீ முல்லைய கூட பாக்கல இன்னும் அந்த புள்ள முகத்தை கூட பாக்கல இவன கொன்னுட்டு ஜெயிலுக்கு போனா எல்லாம் சரியாயிடுமா இனிமே தாண்டா உனக்கு பொறுப்பு அதிகம் நீ இவன கொண்டுட்டு ஜெயிலுக்கு போயிட்டா முல்ல புள்ளைய தூக்கிக்கிட்டு ஜெயில்ல வந்து பாக்குமா ஏண்டா இவ்ளோ கோவம் உனக்கு என அறிவுரை கூறிய வருகிறார் ஜீவா.
அடுத்த காட்சியில் ஹாஸ்பிடலுக்கு ஜீவா வந்து விடுகிறார் அப்பொழுது குழந்தை நல்லபடியா பொறந்துடுச்சு கொழுந்தனாரை ஒரு சாக்லேட் கூட வாங்கி தர மாட்டீங்களா என கேட்க முள்ளையும் குழந்தையும் வீட்டுக்கு வரட்டும் விருந்து வைக்கிறேன் எனக் கூற பரவால்ல இப்போதைக்கு சாக்லேட் வாங்கி தாங்க என கேட்கிறார் மீனா. உடனே தனம் அவன் இன்னும் சாப்பிட கூட இல்ல முல்லை பார்த்த பிறகு தான் அவனுக்கு உசுரே வரும் என்பது போல் கூற உடனே டாக்டர் வெளியே வருகிறார்.
டாக்டரிடம் குழந்தையை பார்க்க முடியுமா என கேட்கிறார்கள் இவன் மட்டும் பார்க்கட்டும் என தனம் கூற பேஷண்டை டிஸ்டர்ப் பண்ணாமல் பாருங்கள் எனக் கூறுகிறார்கள் கதிர் முல்லையை பார்க்கப் போகிறார் முல்லை பார்த்த கதிர் கண்ணீரில் மிதக்கிறார் முல்லை முழித்து கொண்டு எதற்காக அழுகுறீர்கள் என்னால தானா இவ்ளோ கஷ்டம் என்ன கதிர் கூற அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீங்க சாப்டீங்களா என கேட்கிறார் எப்ப பாரு என்னோட நினைப்புதானா என கதிர் பேசிக் கொண்டிருக்கிறார்.
அவ்வளவு சீக்கிரம் நான் உங்களை விட்டு போக மாட்டேன் என முல்லை கூற உடனே கதிர் அவ்வளவு சீக்கிரம் நான் உன்னை விட்டு விட மாட்டேன் என கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் பாப்பாவையும் உன்னையும் இனி பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என கதிர் கூறுகிறார். பிறகு ஒவ்வொருவராக முல்லையை வந்து பார்க்கிறார்கள் தனம் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் என அனைவரும் வந்து பார்க்கிறார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக முல்லையின் அம்மா முல்லையை பார்த்து கதறி அழுகிறார் இனிமே நான் நல்லா பாத்துக்குறேன் முல்லையை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் அது என்னோட பொறுப்பு என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் கதரிடம் மன்னிப்பும் கேட்கிறார் அடுத்த காட்சியில் குழந்தை நல்ல படியாக பிறந்ததற்காக கோவிலுக்கு சென்று தேங்காய் உடைக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.