பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் முல்லைக்கு அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கிறார் அதனால் முல்லையின் அம்மா கண்ணீருடன் அழுது கொண்டிருக்கிறார் உங்களுடைய குடும்பத்தில் கட்டிக் கொடுத்தோம் அதனால் தான் அவ கஷ்டத்துக்கு மேல கஷ்டம் அனுபவிக்கிற உங்க வீட்டு ராசி தான் அவளை எப்படியோ வாட்டி வதைக்கிறது என முல்லையின் அம்மா கூற அதற்கு மூளையின் அப்பா என்ன பேசுற என கூற மூர்த்தி விடுங்க மாமா என சமாளிக்கிறார்.
முல்லையும் பாப்பாவும் கண்டிப்பா நல்லபடியா வரும் என ஆறுதல் கூறுகிறார்கள். அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா கண்ணனிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறார் அதற்கு கண்ணன் எனக்கு ஒரு பிரச்சனைன்னா அண்ணன் தான் வந்து முன்னாடி நிக்கும் எனக்கு மட்டும் இல்லை என் குடும்பத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அண்ணன் தான் முன்னாடி வந்து நிற்கும் ஆனால் அண்ணனுக்கு இப்படி ஒரு நிலைமை அண்ணன் எவ்வளவு தான் கஷ்டப்படும் என்பது போல் கண்ணன் பேசுகிறார்.
அதுமட்டுமில்லாமல் எல்லா பிரச்சினைக்கும் காரணம் நான் தான் எனக் கூற ஐஸ்வர்யா ஏன் கண்ணா இதுக்கெல்லாம் உன் மேல பழி போட்டுக்குற இதுக்கெல்லாம் காரணம் நீ இல்ல கண்டிப்பா அக்காவும் பாப்பாவும் நல்லபடியாக இருப்பாங்க ஆபரேஷன் கண்டிப்பா நல்லபடியா முடியும் இரண்டு பேரும் நல்லா இருப்பாங்க என ஐஸ்வர்யா கூற நாம என்ன ஆழ்மனத்தில் நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் ரெண்டு பேரும் நல்லா இருப்பாங்கன்னு நினை கண்டிப்பா நல்லதே நடக்கும் என ஐஸ்வர்யா கூறுகிறார்.
ஹாஸ்பிடலில் மூர்த்தி, கதிர், ஜீவா, மீனா, தனம் என அனைவரும் இருக்கிறார்கள் அப்பொழுது கதிர் முல்லை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அப்பொழுது மீனா ஜீவாவிடம் எல்லாரும் சாப்பிடாம இருக்காங்க ஏதாவது வாங்கிட்டு வா சாப்பிட சொல்லலாம் என கூற ஜிவா டீ வாங்கிக்கொண்டு வருகிறார் ஆனால் கதிர் டீ குடிக்காமல் மறுக்கிறார் அதை போல் தனம் மூர்த்தி என அனைவரும் டீ குடிக்காமல் இருக்கிறார்கள்.
முள்ளையும் பாப்பாவும் நல்லபடியா வரட்டும் அதுக்கப்புறம் பாத்துக்கலாம் என மூர்த்தி கூறுகிறார். ஆனால் கதிர் முல்லையை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார் அதற்கு தனம் கதிர் அழாத கதிர் முல்லைக்கு எதுவும் ஆகாது நான் சொல்றேன்ல நம்பு எனதனம் கூறுகிறார். மூர்த்தி கதரிடம் இதுதான் கடைசியா கஷ்டப்படுறதா இருக்கட்டும் இதற்கு மேல் உனக்கு கஷ்டமே வரக்கூடாது என ஆறுதல் கூறுகிறார்.
ஆப்ரேஷன் பண்ணி ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னும் எதுவுமே சொல்லல முல்லைக்கு எதுவும் ஆகாதுல்ல என மீனா கேட்க ஜீவா நீ தான் இவ்வளவு நேரம் தைரியம் கொடுத்த நீ இப்படி பேசலாமா அதெல்லாம் எதுவும் ஆகாது எனக் கூறுகிறார். டாக்டர் வெளியே வந்த பிறகு முல்லை நலமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்து விட்டது எனவும் பெண் குழந்தை பிறந்துள்ளது எனவும் கூறுகிறார் இதனால் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். முல்லையை பார்க்கலாமா என கதிர் கேட்க நார்மல் வார்டுக்கு ஷிப்ட் பண்ணுன பிறகு பார்க்கலாம் என டாக்டர் கூறிவிடுகிறார்கள் உடனே மூர்த்தி அம்மாவே குழந்தையாக பிறந்திருக்கு என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.