Pandian store : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில்.. முல்லையின் அம்மா மீனாவிடம் நான் முல்லை கூட திருச்சிக்கு போறேன் நீ வீட்ல இரு என சொல்வதற்கு மீனா உங்களால் முடியாது நானே போறேன் என சொல்ல முல்லையின் அம்மா நீ வீட்ல இருந்தா வீட்டுப் பொறுப்பெல்லாம் நீ பாக்குற மாதிரி இருக்கும் என்று தானே திருச்சிக்கு போறேன்னு சொல்ற என்று கேட்க மீனாவும் ஆமா அதனால தான் என சொல்றாங்க..
கடைசியா முல்லை மீனாவும் தனம் அக்காவும் என் கூட வரட்டும் நாங்க மூணு பேருமே போயிட்டு வரோம் இத பத்தி இனிமே பேசாதீங்க என்று சொல்கிறார்.. திரும்பத் திரும்ப வீட்ல இதை பத்தியே பேசுறதால மீனா ரொம்ப டென்ஷன் ஆகி அங்கங்க பொண்ணுங்க எங்க எங்கேயோ போறாங்க இங்க இருக்கிற திருச்சிக்கு நம்ம மூணு பேரும் போக எவ்வளவு கேள்வி கேக்குறாங்க என்று மீனா தனத்திடம் கத்துகிறார்..
அடுத்து கதிரின் ஹோட்டலுக்கு ஜீவா வருகிறார். கதிர் ஜீவாவுக்கு காபி போட்டு கொடுத்து விட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்து கண்ணனும் அங்கு வருகிறார் கண்ணன் சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஜீவாவும் கதிரும் என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க என்று கேட்க லஞ்சம் வாங்குனத நினைச்சு எனக்கு இன்னும் குற்ற உணர்ச்சியா இருக்கு தெருவுல எல்லாரும் ஒரு மாதிரி பேசுறாங்க என்று கூற கதிர் பேசுறவங்க..
பேசிக்கிட்டு தான் இருப்பாங்க அதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத எல்லாம் சரியாயிடும் என்று கூறுகிறார்.. அடுத்து வீட்டில் கதிர் முல்லை இடம் என்ன பாக்காம ஒரு வாரம் உன்னால இருக்க முடியுமா என்னால எல்லாம் இருக்க முடியாது உன்ன பாக்கணும்னு தோணுச்சுன்னா உடனே வந்துடுவேன் என்று கூறுகிறார்.. அதற்கு முல்லையும் எனக்கும் உங்களை பார்க்காமல் இருப்பது கஷ்டம் தான் சின்ன சின்ன பிரிவு வருவது நம்ம காதலை இன்னும் அதிகரிக்கும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இரவு மீனாவும் ஜீவாவும் வீட்டுக்கு வந்தவுடன் மீனாவின் அம்மா பாப்பா கூட கொஞ்ச நேரம் கூட நீ இருக்க மாட்டேங்குற நாளைக்காவது கயல் கூடயே இரு என்று சொல்வதற்கு மீனா நாளைக்கு முல்லை கவர்மெண்ட் எக்ஸாம் எழுத திருச்சிக்கு போறாங்க நானும் அவங்க கூட போகணும் வர ஒரு வாரம் ஆகும் கயல நீயே பாத்துக்கோமா என்று சொல்கிறார்..
இதைக் கேட்ட மீனாவின் அப்பா முல்லை எக்ஸாம் எழுத நீதான் கூட போகணுமா அவங்க அப்பா அம்மா போக மாட்டாங்களா என்று கேட்க மீனா காலையிலிருந்து இத பத்தியே பேசி எனக்கு தலை வலிக்குது நீங்க எதா இருந்தாலும் ஜீவா கிட்ட கேட்டுக்கோங்க என்று சொல்லிவிட்டு மீனா செல்கிறார். ஜனாதரன் ஜீவாவிடம் முல்லை எக்ஸாம் எழுத கயல விட்டுட்டு மீனா போகணுமா..
நீங்களும் மீனாவும் எங்கேயாவது டூர் போறீங்கன்னா கயல நாங்க பாத்துப்போம்.. முல்லை எக்ஸாமுக்கு, தனதுக்கு பிரசவம் என்றெல்லாம் மீனா அலைஞ்சுகிட்டு இருக்காளே என்று கேட்க ஜீவா வீட்டுல இப்ப அடுத்தடுத்து குழந்தை பிறந்ததால சூழ்நிலை சரியில்லை அதனாலதான் மீனா போற மாதிரி ஆயிடுச்சு என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது