Pandian store : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில்.. ஐஸ்வர்யா குழந்தைகளை வீடியோ எடுத்ததை பார்த்து கோபப்பட்ட மூர்த்தி தனத்திடம் சென்று ஐஸ்வர்யா ஏன் இப்படி இருக்கு யார் சொன்னாலும் கேட்கவே கேட்காதா குழந்தைகளை வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கு என சொல்கிறார்.
அதற்கு தனம் நான் கண்ணன் கிட்ட பேசுற மாமான்னு கண்ணனை கூப்பிட்டு ஐஸ்வர்யா ஏன் இப்படி இருக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரிஞ்சுக்காதா என தனம் சொல்வதற்கு கண்ணன் என்ன விஷயம் என்று கேட்காமல் நான் போய் ஐஸ்வர்யா கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன் என்று சொல்லிட்டு போறார் அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி கண்ணன் வந்து அண்ணி..
ஐஸ்வர்யா கிட்ட என்ன சொல்லி புரிய வைக்கணும் என கேட்பதற்கு தனம் அவள் குழந்தைகளை வீடியோ எடுத்துட்டு இருக்கா என்று சொல்வதும் கண்ணன் ஐஸ்வர்யா கிட்ட பேசுறேன் என்று சொல்லிட்டு கண்ணன் ஐஸ்வர்யாவை பார்த்து ஏன் குழந்தைகளை எல்லாம் வீடியோ எடுக்குற எத்தன தடவ சொல்லிருக்கேன் இனிமே இந்த வீடியோ பழக்கத்தையெல்லாம் விடு எனக் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே கஸ்தூரி அப்ப வராங்க..
அவங்க என்ன பிரச்சனை என கேட்கும் போது ஐஸ்வர்யா கண்ணன் என்ன வீடியோ எடுக்காதன்னு சொல்லி திட்றானு சொல்லும் போது உங்க பிரச்சனை எல்லாம் என்கிட்ட சொல்லாதீங்க என்ன கேட்டா நீங்க கல்யாணம் பண்ணீங்க இவள கல்யாணம் பண்ணா நீ உருப்பட மாட்டேன்னு உன்கிட்ட எத்தன தடவ கண்ணா சொல்லி இருக்கேன் அதையும் கேட்காமல் நீ கல்யாணம் பண்ணல இப்ப அனுபவை என்கின்ற மாதிரி கஸ்தூரி சொல்லிவிட்டு போயிடுறாங்க..
அடுத்து மீனா அவங்க அப்பா அம்மா கிட்ட நான் என் வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ஜீவா உடன் மூர்த்தி வீட்டுக்கு வந்துட்டாங்க அங்கு எல்லோரையும் உட்கார வைத்து கதிர் அனைவரிடமும் முல்லை எக்ஸாம் எழுத திருச்சிக்கு போகணுமா கூட நானும் போயிட்டு வரேன் என சொல்வதற்கு மீனா கொழுந்தனாரே நீங்க போக வேண்டாம் நான் முல்லை கூட போயிட்டு வரேன்னு சொல்றாங்க..
அப்புறம் எல்லாம் நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா எப்படி போவீங்கன்னு கேட்பதற்கு தனம் நானும் முல்லை மீனா கூட போயிட்டு வரேன் என தனம் சொல்றாங்க இதுக்கு மூர்த்தி நீங்க மூணு பேரும் தைரியமா போயிட்டு வருவீங்க ஆனா உங்க மூணு பேரையும் தனியா அனுப்பிட்டு எங்களால தைரியமா இருக்க முடியாது என சொல்கிறார்.. இத்துடன் இந்த எபிசோடு முடிவடைந்துள்ளது.