தனம் எவ்வளவு தடுத்தும் குடுபத்தர் முன்னிலையில் உண்மையை உடைக்கபோகும் மீனா.! வெளியானது பாண்டியன் ஸ்டர் இந்த வார ப்ரோமோ வீடியோ

meena pandian store
meena pandian store

பாண்டியன் ஸ்டோர் எபிசோடில் தனத்திற்கு கேன்சர் இருப்பது தெரிய வருகிறது இதனால் வீட்டில் இருப்பவர்களிடம் தனம் மறைத்துக் கொண்டு இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் மீனாவிற்கு தெரிய வர இருவரும் சேர்ந்து வீட்டிற்கு தெரியாமல் மறைத்து விடுகிறார்கள்.

டாக்டரை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது எவ்வளவு சீக்கிரம் ஆப்பரேஷன் செய்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு தான் நல்லது என்பது போல் கூற ஆனால் தனம் தனக்கு உள்ள கடமையை செய்து முடிக்க வேண்டும் என கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு நடத்துகிறார். இந்த பங்க்ஷன் முடிந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அந்த சமயத்தில் தனம் பெட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

அப்பொழுது மீனா வந்து வளைகாப்பு நல்லபடியா முடிஞ்சிடுச்சு இப்பயாவது வீட்டில் சொல்லிவிடலாம் என கூற வேண்டாம் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதனால் சொல்ல வேண்டாம் எனக் கூற சரி சொல்ல வேண்டாம் ஆனா ட்ரீட்மென்ட் செய்ய ஆரம்பித்து விடலாம் என மீனா தனத்திடம் சொல்ல எப்படி அவுங்களுக்கெல்லாம் தெரியாம குழந்தையை ஆபரேசன் செய்து வெளியில் எடுக்க முடியாது என தனம் கூறுகிறார்.

இப்படியே ஏதாவது சொல்லி சொல்லி ட்ரீட்மென்ட் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இது சரிப்பட்டு வராது நான் போய் எல்லாத்தையும் சொல்லிடறேன் என மீனா எழுந்து செல்கிறார் அந்த சமயத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் மீனா அனைவரிடமும் சொல்வாரா மாட்டாரா என்பது இனிவரும் எபிசோடு தெரிய வரும்.

தற்பொழுது இந்த பிரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.