பணத் தேவைக்கு மட்டும் கதிர் வேண்டுமா.! நடுரோட்டில் நாக்கை புடுங்குற மாதிரி கண்ணனை கேள்வி கேட்கும் மூர்த்தி.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

pandianstore
pandianstore

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஜீவாவை சாப்பிடுவதற்கு கூப்பிட வருகிறார். அப்பொழுது ஜீவா உங்க அப்பா ஒரு முடிவை எடுத்துட்டு அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்கணும் என மீனாவை பார்த்து கேட்கிறார் அவருக்கு வயசாயிடுச்சு அதனாலதான் இப்படி நடந்துக்கிறார். விடு நீ பீல் பண்ணாத என மீனா  கூற  ஆனால் ஜீவா கடையும் பாத்துக்க குடோனையும் பார்த்துக்கின்னு உங்க அப்பா சொல்லுவாரு ஆனா கடைக்கு போனா அவரு எல்லா வேலையும் சொல்லிட்டு வந்துருவாரு அதுக்கு அப்புறம் நான் போய் ஏதாவது ஒரு வேலை விட்டா அதான் உங்க மாமாவே சொல்லிட்டாரு அப்புறம் ஏன் நீங்க வேற சொல்றீங்க என கேக்குறாங்க.

நான் எதுக்கு சும்மா போயிட்டு வந்துட்டு அதுக்கு அவரே எல்லாத்தையும் பாத்துக்கலாம்ல்ல நான் ஏதோ நட போனமாய்  இருக்கிற மாதிரி இருக்கு என ஃபீல் பண்ணுகிறார். அதற்கு மீனா விடு பாத்துக்கலாம் என ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் தனம் மற்றும் முல்ல இருவரும் பேசிக் கொள்கிறார்கள் அப்பொழுது முல்லை கதிரிடம் கண்ணன் பணம் வாங்கியதை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் வீடியோ எடுப்பதற்காக மறுபடியும் பணம் வாங்கியுள்ளார் எனவும் தனதிடம்  கூறுகிறார்.

அதற்கு இந்த கண்ணனுக்கு அறிவே இல்லையா அவனே கஷ்டப்பட்டு கதிர் சம்பாதிக்கிறான் அதை போய் வாங்கிட்டு போறான் என தனம் திட்டிக் கொண்டிருக்கிறார். அவங்களுக்கு பணம் வேணும்னா மட்டும் கதிர் வேணும் ஆனா கதிர கொஞ்சம் கூட மதிக்க மாட்டாங்க எதுத்து எதுத்து பேசுவாங்க என கூறுகிறார். அடுத்த காட்சியில் தனம்  ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் வீட்டிற்கு செல்கிறார் அங்கு தனம் கண்ணனை பார்த்து கதிரிடம் பணம் வாங்கினியா என கேட்க அதற்கு ஆமாம் நான் தான் வாங்க சொன்னேன் என ஐஸ்வர்யா கூறுகிறார்.

ஆனா முல்லை கதிர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான் அவர்கிட்டயே என் பணம் வாங்குறாங்கன்னு கேட்கிறார் எனக் கூற ஐஸ்வர்யா நான் முல்லை கிட்ட பணம் வாங்கல கதிர் மாமா கிட்ட தான் பணம் வாங்கினோம் எனக் கூற உடனே கண்ணன் கிட்ட பணம் வாங்கிகிட்டு உன் கிட்ட பணம் வாங்கலன்னு சொன்னா நீ ஏத்துப்பியா என தனம் கேட்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யா முழிக்கிறார்  எவ்வளவு சம்பளம் வாங்குறீங்களோ அதுக்குள்ள குடும்ப செலவை பாருங்க தேவையில்லாம மறுபடியும் மறுபடியும் கதிர்ட்ட போய் பணம் கேட்காதீங்க உங்களுக்கு பணம் வேணும்னா என்கிட்ட கேளுங்க என தனம் கூறிவிட்டு கிளம்புகிறார் கிளம்பும் நேரத்தில் கண்ணனிடம் அட்வைஸ் செய்துவிட்டு வருகிறார்.

வீட்டிற்கு வந்த தனத்திடம் முல்லை எங்கே போயிட்டு வரீங்க என கேட்க கண்ணனை பார்த்துவிட்டு வருகிறேன் என கூறுகிறார். உடனே முல்லை ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா என கேட்டுவிட்டு பணத்தை தனம் முல்லையிடம்  கொடுக்கிறார் ஆனால் முல்லை பணத்தை வாங்க மறுக்கிறார் இதனை பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி உள்ளே வருகிறார். எதற்காக பணம் நீ கொடுக்கிற முல்லை வேணாம்னு சொல்ற என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என மழுப்புகிறார்கள்.

பிறகு மாமா கிட்ட நீ பொய் சொல்ல மாட்ட உண்மைய சொல்லு என முல்லையை கேட்க முல்லையும் அனைத்து உண்மைகளையும் கூறிவிடுகிறார். உடனே மூர்த்தி கடும் கோபமாக அன்னைக்கு அவ்வளவு பேசி அசிங்கப்படுத்திட்டு போனான் இன்னைக்கு எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு பணம் கேட்டு வாங்குறான் அவனே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான் அவன்கிட்ட போய் இவன் பணம் கேட்கிறானா என செம கோவம் ஆகிறார்.

அடுத்த காட்சியில் மூர்த்தி போன் செய்து கொண்டிருக்கும் பொழுது கண்ணன் மளிகை சாமானை வாங்கிக்கொண்டு வருகிறார் அப்பொழுது கண்ணனை மூர்த்தி கூப்பிடுகிறார். கண்ணனைப் பார்த்து அன்னைக்கு நீங்க சம்பாதிச்ச பணத்தை வீட்ல கொடுத்து திரும்ப செலவுக்கு வாங்குவது உங்களுக்கு அவ்வளவு அசிங்கமா இருந்துச்சு கதிரிட்ட போய் பணம் வாங்கிட்டு இருக்க உனக்கு அசிங்கமா இல்லையா என கண்ணனை பார்த்து மூர்த்தி கேள்வி கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.