Pandian store : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகின்றன இருந்தாலும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத சீரியலாக பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில்..
தனத்தின் அம்மா, மூர்த்தி, முல்லை, மீனா போன்ற நான்கு பேரும் குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது குழந்தை அழுவதால் தனத்தின் அம்மா பாப்பாவுக்கு பசிக்குது போல பால் கொடுன்னு தனத்துகிட்ட சொல்றாங்க அதனால மூர்த்தியும் வெளிய போயிடுறாங்க அப்புறம் தனம் அவங்க அம்மாவயும் வெளிய போக சொல்றாங்க..
தனத்திற்கு பிரஸ் கேன்சர் இருப்பதால் குழந்தைக்கு பால் கொடுக்க யோசிக்கிறாங்க உடனே முல்லை அக்கா நான் குழந்தைக்கு பால் கொடுக்கிறேன்னு சொல்லி முல்லை பால் கொடுக்குறாங்க இதை நினைச்சு தனம் ரொம்ப வருத்தப்படுறாங்க பெத்த குழந்தைக்கு என்னால பால் கொடுக்க முடியலையேன்னு..
இன்னொரு பக்கம் வீட்டில் மூர்த்தி தனியா உக்காந்து பயங்கரமா யோசிச்சு தானா பேசிட்டு இருக்காரு இத பாத்து கதிரும் ஜீவாவும் என்ன அண்ணன் தனியாக பேசிக்கிட்டு இருக்காரு அப்படின்னு சொல்லிட்டு கிட்ட வராங்க அப்ப அவங்க கிட்ட மூர்த்தி மொத்தம் நாலு பொண்ணுங்கள் ஆயிடுச்சு ஒரு பொண்ணுக்கு நூறு பவுன் என்றாலும் மொத்த 400 பவுன் சேர்க்கணும்..
அதான் எப்படி சேர்க்குறதுன்னு அத பத்தி யோசிச்சிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க அதுக்கு ஜீவா இப்ப என்ன அண்ணா அதற்கு அவசரம் இன்னும் எவ்வளவு வருஷம் இருக்கு அப்படின்னு சொல்றாங்க.. இத பாத்து முல்லை நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னே தெரியல அதற்குள்ள இவங்க இருவது வருஷத்துக்கு அப்புறம் நடக்க போறத பேசிட்டு இருக்காங்கன்னு நினைச்சுட்டு உள்ள போறாங்க..
உள்ள போனா கஸ்தூரி குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்காங்க அதுக்கு முல்லை அத்தாச்சி என் பொண்ணு தூங்கிட்டு இருக்கா நீ பொறுமையா குறட்டை விடுனு சொல்லிக்கிட்டு மீனாவுக்கு போன் பண்ணி அடுத்து அக்காக்கு ட்ரீட்மென்ட் எப்படி பண்றதுன்னு பேசிட்டு இருக்காங்க இதை கஸ்தூரி காதுல வாங்கிட்டு தனத்துக்கு என்ன ட்ரீட்மெண்ட்ன்னு கேக்குறாங்க..
அதுக்கு முல்லை பேசாம தூங்கு தூக்கத்துல உலராதன்னு கஸ்தூரிகிட்ட சொல்லிட்டு மீனா கிட்டயும் காலையில பேசலாம்னு போன வைக்கிறாங்க.. அடுத்த நாள் ஹாஸ்பிடல்ல டாக்டர் தனத்து கிட்ட என்னைக்கு ட்ரீட்மென்ட் வச்சுக்கலாம் சீக்கிரமா பண்றது ரொம்ப நல்லதுன்னு கேக்குறாங்க அதுக்கு மீனா கூடிய சீக்கிரமே ஒரு டேட் சொல்றோம் டாக்டன்னு சொல்றாங்க..
டாக்டர் நீங்க கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க தனத்துக்கு ட்ரீட்மென்ட் பண்ண வேண்டிய டாக்டர் திருச்சியில் இருக்காரு அங்க தான் போய் டிரீட்மென்ட் பண்ணி ஆகணும் அப்படின்னு சொல்றாங்க இதை கேட்டு தனம், முல்லை, மீனா மூணு பேருமே ஷாக் ஆகுறாங்க திருச்சி எப்படி போறதுன்னு யோசிக்கிறாங்க.. அப்புறம் தனம் குழந்தையை தூக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க கஸ்தூரி ஆர்தி எடுத்து உள்ள வர வைக்கிறாங்க இதோட இந்த எபிசோடு இன்று முடிவடைந்துள்ளது.