Pandian store : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் மூர்த்தி மற்றும் தனத்தின் அம்மா அண்ணன் மூன்று பேரும் காரணமே இல்லாமல் டாக்டர் தனத்திற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்றாங்க இதுக்கு நம்ம சம்மதிக்கவே கூடாது இல்லனா நம்ம வேற ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போய் காமிக்கலாம்.
டாக்டருக்கு வேற வேலை இருக்குறதால சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணலாம்னு நினைக்கிறாங்க அப்படின்னு பேசிகிட்டு இருக்காங்க இன்னொரு பக்கம் மீனாவும் முல்லையும் தனத்தை போய் பார்த்து மாமா சைன் போட மாட்டேங்குறாரு டாக்டரும் சைன் போடாம ஆப்ரேஷன் செய்ய மாட்டேங்கிறாங்க என்ன பண்றதுன்னு பேசிட்டு இருக்காங்க.. வேற வழி இல்லாம திரும்ப மீனாவும் முல்லையும் டாக்டர போய் பார்த்து நீங்க அக்காக்கு ரொம்ப சீரியஸ்..
அப்படின்னு எங்க மாமா கிட்ட சொல்லி சைன் போட சொல்லுங்க டாக்டர்ன்னு மீனா டாக்டர் கிட்ட கேக்குறாங்க டாக்டர் அதெல்லாம் என்னால பண்ண முடியாது. மூர்த்தி சைன் போட்டா தான் என்னால ஆபரேஷன் பண்ண முடியும் அவங்க கிட்டயே போய் பேசுங்கன்னு சொல்லிடுறாங்க.. மீனாவும் முல்லையும் இதுக்கு ஒரே வழி தான் இருக்கு முல்லை நீ போய் ஜீவா கிட்ட பேசு நான் போய் கதிர் கிட்ட பேசுறேன்னு..
மீனாவும் முல்லையும் மாறி மாறி அவங்க கிட்ட போய் பேசும்போது கதிரும் ஜீவாவும் முதலில் ஆப்ரேஷன் பண்ணா வலிக்கும் அதெல்லாம் ரொம்ப கஷ்டம் வேணான்னு சொல்றாங்க அப்புறம் மீனாவும் முல்லையும் ஆபரேஷன் எல்லாம் ரொம்ப சாதாரணம் அதெல்லாம் வலிக்காது அப்படியே வலிச்சாலும் அதற்கு மருந்து கொடுப்பாங்க அப்படின்னு பேசுறதால கடைசியா ஜீவாவும் கதிரும் ஓகே சொல்லிவிட்டார்கள்.
வீட்டில் இருக்கும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் என்ன ஹாஸ்பிடல் போன யாருமே ஒன்னும் தகவல் சொல்லல அங்க என்ன நடக்குதுன்னு தெரியலன்னு பேசும்போது ஐஸ்வர்யாவோட சித்தி வந்து ஐஸ்வர்யாவுக்கு ஜூஸ் தராங்க ஐஸ்வர்யா என்ன சித்தி எனக்கு மட்டும் தரீங்க கண்ணனுக்கு இல்லையான்னு கேட்க பிள்ளை பெத்தது நீதான் கண்ணன் என்ன ஜெயிலுக்கு தானே போயிட்டு வந்தா அவனுக்கு என்னன்னு நக்கலா பேசுறாங்க இதைக் கேட்டு கண்ணன் ரொம்ப வருத்தப்படுறாரு..
அப்புறம் ஐஸ்வர்யா கண்ணன் கிட்ட நம்ம வீடியோ எடுக்கலாமான்னு கேக்க கண்ணன் அதெல்லாம் வேணான்னு சொல்லி எழுந்து போய்ட்டாரு அப்புறம் ஐஸ்வர்யா மட்டும் தனியாக ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு கண்ணன் ஐஸ்வர்யா சேனல்னு சொல்லி தனியா வீடியோ எடுத்துட்டு இருக்காங்க இதோட இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது.