“பாண்டியன் ஸ்டோர்” சீரியல் முடிவுக்கு வரபோகுதா? சுஜிதா வெளியிட்ட புகைப்படம்.

pandian store

சின்னத்திரையில் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கிற்காக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் ஒரு சில முக்கிய சீரியல்கள் சிறந்த கதைகளத்துடன் அமைந்து மக்களை மகிழ்வித்து வருகின்றன அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல் ஆகும்.

மேலும் இது தமிழ் சீரியல்களில் டிஆர்பி யிலும் முன்னிலையில் வகிக்கும் தொடராகும். இதில் அண்ணன் தம்பி பாசம் குடும்ப ஒற்றுமை போன்றவற்றை அழகாக வெளிக்காட்டி வருகின்றனர். இதில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா இந்த கதாபாத்திரத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர்.

இவர் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து அறிமுகமானவர். ஆனால் இவருக்கு அதிகம் பேரையும் புகழையும் வாங்கி தந்தது தமிழில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சுஜிதா.

சோஷியல் மீடியாவிலும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறார். தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி தெலுங்கில் வத்தினம்மா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலிலும் நடிகை சுஜிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் தற்போது இந்த சீரியல் குறித்து ஒரு புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வத்தினம்மா சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த சீரியல் முடிவடைய உள்ளது என சோகத்துடன் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

pandiyan pandiyan store - telungu
pandiyan store – telungu