தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோ அஜித். சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஹச். வினோத்துடன் கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் திடீரென அதில் இருந்து பின்வாங்கி உள்ளது.
இதனால் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். காரணம் தற்போது நிலவும் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருப்பதே காரணம் என தெரிய வருகிறது. வலிமை படம் நிச்சயம் பிரச்சனைகளையும் தாண்டி வெளிவந்து அசத்தும் என படக்குழு நம்பி இருக்கிறது.
இதற்காக அடுத்த படத்தில் நடிக்காமல் இருப்பதே சரி இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அஜித்தும், வினோத்தும் தொடர்ந்து அடுத்தடுத்த விஷயத்தை நோக்கி பயணிக்கின்றனர் அந்த வகையில் அஜித் 61 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
வெகு விரைவிலேயே 61 படத்தின் பூஜை போடப்பட்டு அந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் ஆரம்பம் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட்டடித்த படம் வாலி இந்த திரைப்படத்தை நடிகரும், இயக்குனருமான எஸ். ஜே. சூர்யா எடுத்து அசத்தி இருந்தார்.
படத்தில் ஹீரோ வில்லன் என அஜித் டபுள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் இந்த படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிகை சுஜிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்போது புதிதாக ஒரு சில பழைய படங்களில் நடித்தாலும் பெரிதும் சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறாராம் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வாலி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் எஸ். ஜே. சூர்யா ஆகியோருடன் இணைந்து சீரியல் நடிகை சுஜிதா எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.