தனத்துக்கு நடத்த அறுவை சிகிச்சை.. பதட்டத்தில் மீனா, முல்லை – டாக்டர் சொன்னது என்ன தெரியுமா.?

Pandian store serial
Pandian store serial

Pandian store : சின்னத்திரையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த காலகட்டத்தில் கூட்டு குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் வகையில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் போன்ற நான்கு அண்ணன் தம்பிகள் ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கிடையே சின்ன சின்ன மனஸ்தாபம் வந்தாலும் ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் நான்கு பேரும் ஒன்று கூடி விடுவார்கள். அதேபோல் இவர்கள் நான்கு பேரின் மனைவிகளும் ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர். தற்போது கூட இந்த சீரியலில் தனத்திற்கு பிரஸ் கேன்சர் இருக்கிறது. ஆனால் அதை வீட்டில் சொன்னால் மற்றவர்கள் கஷ்டப்படுவார்கள்..

என்பதால் வீட்டில் உண்மையை சொல்லாமல் திருச்சிக்கு சென்று தனத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக மீனாவும் முல்லையும் பல திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோவில் மீனா, முல்லை, தனம் மூன்று பேரும் திருச்சிக்கு சென்றுள்ளனர் அங்கு தனத்தை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துள்ளனர்.

தனத்திற்கு ஆப்ரேஷன் செய்த டாக்டர் மீனா மற்றும் முல்லையிடம் தனத்திற்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது என்று சொல்வதும் மீனா நாங்க அக்காவ போய் பாக்கலாமா என்று கேட்க அவங்க மயக்கத்துல இருக்காங்க ஒரு ஐந்து நிமிஷம் கழிச்சு போய் பாருங்க என்று டாக்டர் சொல்லுகின்றனர். கொஞ்ச நேரம் கழித்து மீனாவும் முல்லையும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தனத்தை போய் பார்க்கிறாங்க..

மீனா தனத்துகிட்ட இனிமேல் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என டாக்டர் சொல்லிட்டாங்க அக்கா என்று கூறுவதற்கு தனம் உங்க ரெண்டு பேருக்கும் தான் நா நன்றி சொல்லனும் நீங்க ரெண்டு பேரும் இல்லனா நான் இந்த ஆப்ரேஷன் செஞ்சிருக்கவே மாட்டேன் என்று தனம் சொல்ல.. முல்லை இவ்ளோ பெரிய நோயை நீங்க தான் போராடி வென்று இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்.