பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணனிடம் பணம் கேட்டு வந்து பேங்க் ஆபீஸர்கள் அடித்து துவைத்து எடுக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யாவை தூக்கி சென்று விடுவேன் என மிரட்டி விட்டு செல்கிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது என கூறிவிட்டு சென்ற பேங்க் நபர்கள் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் கதிர் வீட்டிற்கு வர நடந்த அனைத்தையும் ஐஸ்வர்யாவின் சித்தி கதிரிடம் கூறிவிடுகிறார் அதுமட்டுமில்லாமல் கண்ணனை அடித்ததை பார்த்த கதிர் கோபம் வருகிறது, அதனால் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பேங்க் ஆபீஸர்களை அடித்து தூம்சம் செய்கிறார்.
அடுத்த நாள் வளைகாப்பு என்பதால் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் அனைவரும் கிளம்பி கொண்டிருக்கிறார்கள் ஆனால் மூர்த்தி வர மறுக்கிறார் வேறு வழி இல்லாமல் அனைவரும் சொன்னதால் மூர்த்தியும் கிளம்பி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது ஆனால் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த ப்ரோமோ வீடியோவில் கதிர் பாங்க் ஆபிஸர்களை அடித்ததால் கதிரை போலீசில் புகார் கொடுக்கிறார்கள் அதனால் கதிர் ஜெயிலுக்கு செல்கிறார் ஆனால் கண்ணன் எதுவும் தெரியாத பச்சை குழந்தை மாதிரி நிற்கிறார். கதிர் ஜெயிலில் இருப்பதை அறிந்த மூர்த்தி பதறி அடித்து ஓடி வந்து போலீஸ் ஸ்டேஷனில் கதறுகிறார்.
மூர்த்தி கத்தியதை பார்த்த போலீஸ் இங்கு எதுவும் பேசக்கூடாது எதா இருந்தாலும் கோர்ட்டில் போய் பேசிக் கொள்ளுங்கள் என கூறி விடுகிறார்கள். பிறகு வக்கீலை வைத்து மூர்த்தி எப்படியாவது கதிரை வெளியே எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ஜீவா பதறி அடித்து ஓடி வந்து கதிரை பார்க்கிறார் எப்படியாவது உன்னை வெளியே எடுத்து விடுறேன் என கதிரிடம் வாக்கு கொடுக்கிறார் ஜீவா.
பிறகு அண்ணனிடம் வந்து கதிரை பார்க்க எனக்கு கஷ்டமாய் இருக்கிறது எப்படியாவது இன்னைக்குள்ள கதிரை வெளியே எடுத்து விட வேண்டும் என கூறுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.