திறமை இருப்பவர்கள் படிப்படியாக மீடியா உலகில் முன்னேறி கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் சின்னத்திரையில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த காவியா அறிவுமணிக்கு விஜய் டிவியில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார்.
இதற்கு முன்பாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா எதிர்பாராத விதமாக இறந்து போக அந்த வாய்ப்பை இவர் கைப்பற்றினார் அதற்கு முக்கிய காரணம் இவர் சீரியல்களில் நடித்து வந்தாலும் பெரும்பாலும் ல் பாவாடை தாவணியில் செம அழகாக கிராமத்து பெண் போல் ரசிகர்களை கவரும் படி இருந்ததால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் முல்லை கதாபாத்திரத்தை இவர் சிறந்த கைப்பற்றுவாரா என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்த நிலையில் போகப்போக தனது திறமையை வெளிக்காட்டி முல்லை கதாபாத்திரத்துக்கு சிறப்பாக செட் ஆனார். சின்னத்திரையில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த காவ்யா அறிவுமணிக்கு ஒரு கட்டத்தில் முகம் ஃபுல்லா முகப்பரு அதிகமாக இருந்ததாம்.
அதை சரி பண்ண லோக்கல் டாக்டர்களை சந்தித்து அதற்கு தீர்வு காண முடிவு செய்தார் ஆனால் எவ்வளவு காசு செலவு பண்ணியும் அதற்கான பலன் கிடைக்கவில்லை ஒருகட்டத்தில் காவியா அறிவுமணி ஆரோக்கிய உணவு மற்றும் டயட் மூலமாகவே அந்த பிரச்சனையை தீர்த்ததாக கூறினார்.
இவர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தது பெண்களுக்கு பருவ வயதில் முகப்பரு வருவது சாதாரணம் ஒன்று ஆனால் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் முகப்பரு இருக்கும் இடத்தில் கை வைக்காமல் சிறிது ஐஸ் கட்டி வைத்தால் போதும் அதை விட்டு விட்டு மனதில் குழப்பத்தை போட்டு டாக்டர்களைப் பார்த்து செலவழிப்பது வேஸ்ட் என கூறி உள்ளார் அதற்கு பதிலாக நீங்கள் கீரை பழங்கள் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் தானாகவே சரியாகிவிடும் என கூறி உள்ளார்.