ஐஸ்க்கு தெரியாமல் நகையை அடகு வைத்து அண்ணனிடம் மாட்டிக் கொண்ட கண்ணன்.! பெரிய பேங்க் ஆபிசர்.. பாண்டியன் ஸ்டோர் ப்ரமோ வீடியோ

pandian-store
pandian-store

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கறி வாங்க சென்ற கண்ணனுக்கு அதிர்ச்சி தான் ஏனென்றால் கறி ஆயிரம் ரூபாய் என்றதும் கண்ணன் வாயை பிளக்குகிறார் பின்பு அரை கிலோ கறியை மட்டும் வாங்கிக் கொள்கிறார் அடுத்ததாக மெடிக்கல் ஷாப்பிற்கு செல்கிறார்.

அங்கு மருந்து விலை அதிகமாக இருந்ததால் வெறும் மூன்று நாட்களுக்கும் ஐந்து நாட்களுக்கு வாங்கிக் கொண்டு வருகிறார் .வீட்டிற்கு வந்த கண்ணன் அவர் வாங்கிய பொருளை பார்த்து ஐஸ்வர்யாவின் சித்தி ஏளனமாக பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யாவின் சித்தி கண்ணனின் அண்ணனை பற்றி பேசும்பொழுது கண்ணனுக்கு கோபம் வருகிறது உடனே எங்கள் அண்ணன் மூன்று கிலோ கறி வாங்குவார் என உடனே கூறுகிறார்.

அடுத்த காட்சியில் ஜனார்த்தனன் மாப்பிள்ளை எடுத்த முடிவு சரிதான் நான் எடுத்த முடிவு தான் தவறு என கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்து மசாலா போட்டு வருபவரை பற்றி கூறுவதற்குள் ஜனார்த்தனன் ஒருவர் தப்பு செய்துவிட்டால் அனைவரும் தப்பு செய்ய மாட்டாங்க அவர் தப்பு செய்தால் என்னிடம் கூறு நான் கேட்டுக்கொள்கிறேன் என ஜனார்த்தனன் கூற ஜீவா எழுந்து போகிறார்.

இந்த நிலையில் இன்றைய புரோமோ வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது இந்த ப்ரோமோ வீடியோவில் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு மருந்து வாங்கவும் இதர செலவுகளை பார்த்துக் கொள்ளவும் ஐஸ்வர்யாவுக்கு தெரியாமல் அவரின் கம்மலை எடுத்துக் கொண்டு அடகு கடைக்கு வைக்க வந்து விடுகிறார் அடகு கடையில் கம்மலை வைத்து விட்டு பணத்தை வாங்கிக் கொள்கிறார் அந்த நேரம் பார்த்து அடகு கடை முதலாளி மூர்த்திக்கு கால் செய்து உங்கள் கடைசி தம்பி அடகு கடைக்கு வந்ததாக கூறுகிறார்.

இதனால் மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த தகவல் தனத்திற்கு தெரிய உடனே தனம் வருத்தப்படுகிறார். ஆனால் மூர்த்தி நாங்களே எல்லாத்தையும் பார்த்துக்கிறோம் என்று தானே போனாங்க அவங்களே சமாளிக்கட்டும் நீங்க யாரும் எதுவும் செய்யக்கூடாது என கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ வீடியோ  முடிகிறது.