விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் முல்லை ஐஸ்வர்யாவை திட்டி விட்டு சென்ற பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவிடம் இனி வீடியோ பண்ண வேண்டாம் அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்றால் நிறுத்தி விடலாம் என கூற ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார்.
என்ன கண்ணா இப்பவே சேனல க்ளோஸ் பண்ண சொல்ற அண்ணன் வீட்டில் இருப்பவர்களின் வீடியோவை போட்டதால் தான் அண்ணனுக்கு பிடிக்கவில்லை இனிமேல் நம்ம அப்படி செய்ய வேண்டாம் அதுக்காக ஆரம்பிச்சா சேனலை க்ளோஸ் பண்ண வேண்டாம் முதல்ல இப்படித்தான் பிரச்சனை வரும் அதற்காக நாம் செய்யறத விட்டுவிடக்கூடாது என ஐஸ்வர்யா கூறுகிறார்.
அடுத்த காட்சியில் ஜீவா வீட்டில் ஒரு இடம் திருச்சியில் இருப்பதாகவும் அதை விற்பதற்காக ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த நேரத்தில் ஒரு ஏக்கர் 50 லட்சம் முடிய போகும் என கூற இரண்டு ஏக்கர் ஒரு கோடி தான் வரும் உடனே ஜீவா கூட்டி கழித்து பார்த்து பிளாட் போட்டு விட்டால் மூன்று கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறுகிறார் உடனே ஜனார்த்தனன் ஏற்கனவே நம்ம பேசி வச்ச பார்ட்டி கிட்ட தான் கொடுக்கணும் அப்பதான் சீக்கிரம் முடியும் என கூறுகிறார்.
உடனே ஜீவா பணம் ஏதாவது அவசர தேவையா எனக் கேட்க அதெல்லாம் எதுவும் கிடையாது என கூறிவிட்டு ஜனார்த்தனன் கிளம்புகிறார் இதனால் ஜீவா கடுப்பாகிறார் இதைப் பார்த்த மீனா செம காண்டில் அப்பாவை திட்டிட்டு இருக்கிறார் எதற்காக இப்படி கேட்டு விட்டு கடைசியில் அவருடைய முடிவையே கேட்க போவதில்லை அதற்காக ஏன் அவரிடம் கேட்கிறீர்கள் எனக்கூறி விட்டு இனிமை ஏதாவது இப்படி ஒரு வேலையை சொன்னா நீங்க எனக்கு தெரியாது உங்க இஷ்டப்படியே செய்யுங்கள் என சொல்லிவிடு ஜீவா என மீனா ஜீவாவிடம் கூறுகிறார்.
அடுத்ததாக ஐஸ்வர்யாவை பார்ப்பதற்கு கண்ணன் வீட்டிற்கு மீனா வருகிறார் அந்த சமயத்தில் கண்ணன் கூட்டிவிட்டு குப்பையை வெளியே கொட்ட போகும் நேரத்தில் மீனா கண் முன்னே நிற்கிறார் இதை பார்த்த கண்ணன் வாருங்கள் அண்ணி விளக்கமுத்துடன் வரவேற்கிறார். அதனைத் தொடர்ந்து கண்ணன் டீ போட்டுக் கொடுக்கும் பொழுது மீனா கண்ணனிடம் ஏன் வீட்டை விட்டு வந்தோம்னு தோணுதா என்று கேட்க ஆமா அண்ணி என கண்ணன் கூறுகிறார் அப்போ அண்ணன் வீட்டுக்கே போக வேண்டியது தானே என கேட்க கண்ணன் இனிமேல் அது மாதிரி போற ஐடியாவே இல்ல போனா அண்ணா அடிக்கும் என கூறுகிறார்.
அடுத்த காட்சியில் இரவு ஜீவா மீனாவிடம் ஏதோ ஒரு பொம்மை மாதிரி இருக்கிற மாதிரி எனக்கு தோணுது நானும் ஏதாவது பண்ணும் இல்ல எங்க கடையில எல்லா வேலையும் நான் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன் ஆனா இங்க சும்மாவே இருக்கிற மாதிரி இருக்கு என சொல்லி மீனாவிடம் பீல் செய்கிறார். அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா மீண்டும் வீடியோ எடுப்பதற்காக ஸ்டாண்ட் வாங்க வேண்டும் என கண்ணனிடம் பணம் கேட்க என்னிடம் பணமும் இல்லை ஒன்னும் இல்லை எனக் கூறுகிறார்.
உடனே ஐஸ்வர்யா உங்க அண்ணன் கிட்ட கேளு என்று சொல்ல அதற்கு அதெல்லாம் முடியாது என கண்ணன் கூறி விடுகிறார் அப்பொழுது ஐஸ்வர்யா உங்க அண்ணன் கதிர்கிட்ட கேளு அவர் தான் நமக்கு சப்போர்ட் பண்றாரு இல்ல என ஐஸ்வர்யா கூற கண்ணன் அதிர்ச்சி அடைந்து ஐஸ்வர்யாவை பார்க்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.