pandian store episode 7/7/2023 : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஜீவா மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மீனா ஜீவாவிடம் அந்த வீட்டிற்கு சேர்ந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அக்கா இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அவங்க அவங்க தனியா பிச்சிட்டு போயிருப்பாங்க ஆனா அக்கா தான் எல்லாத்தையும் கட்டி காப்பாத்திட்டு வராங்க எனக் கூறுகிறார்.
ஆனாலும் ஜீவா அங்கு வந்து ஒன்றாக இருப்பது பற்றி எதுவும் சொல்லாமல் இருந்து வருகிறார். ஜீவாவை மீனா விடுவது போல் தெரியவில்லை அக்காவும் மாமாவும் தான் இப்ப ஆசைப்பட்டு அங்க வான்னு கேக்குறாங்க நீ மாட்டேன்னு சொல்ற உனக்கு தான் அந்த வீட்ல யாரு மேலையும் கோபம் கிடையாது இல்ல அப்புறம் ஏன் வர மாட்ற என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஜீவா நான் வரமாட்டேன் என்று சொல்ல முதல்ல வீடு வேலை முடியட்டும் அதுக்கப்புறம் கிரகப்பிரசவம் முடியட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூற மீனா கத்தி விட்டு வெளியே செல்கிறார். அடுத்த பக்கம் கதிர்முல்லை இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் கதிர் குழந்தை பிறந்த பிறகு நீ என்னை கண்டு கொள்வதே இல்லை என முல்லை இடம் கூறிக் கொண்டிருக்கிறார் இருவரும் சமாதமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த காட்சியில் கண்ணன் வீட்டிற்கு வருகிறார் வந்ததும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க கண்ணனை மூர்த்தி திட்டி விடுகிறார். அவரை சமாதானப்படுத்தும் தனம் பிறகு சாப்பிட கூப்பிடுகிறார் அதனை தொடர்ந்து கண்ணன் தான் வாங்கிய லஞ்சப் பணம் 25 ஆயிரம் ரூபாய் ஐஸ்வர்யாவிடம் கொடுக்க அதைப் பார்த்து ஐஸ்வர்யா அதிர்ச்சியாக இந்த பணம் ஏது என்று கேட்கிறார்.
பிறகு ஏதோ சொல்லி கண்ணன் சமாளிப்பதை பார்த்த ஐஸ்வர்யா நீ லஞ்சம் வாங்கி இருக்கியா ஏற்கனவே மாமா எவ்வளவு கோபத்தில் திட்டிட்டு இருக்காங்கன்னு தெரியுதா இந்த நேரத்துல இது தேவையா இது தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவார் என சொல்லிக் கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
இதனை தொடர்ந்து நாளை எபிசோடில் கண்ணன் வாங்கிய லஞ்சப் பணத்தை ஐஸ்வர்யா அவரின் சித்தியிடம் கொடுக்கும் பொழுது முல்லை பார்த்து தனத்திடம் கூறி விடுகிறார். பிறகு ஐஸ்வர்யா மற்றும் ஐஸ்வர்யாவின் சித்தியை விசாரிக்கும் பொழுது வளைகாப்புக்கு வாங்கிய பணம் தான் கடனாக வாங்கினோம் என ஒப்புக்கொள்கிறார்கள் இனி என்ன நடக்கப் போகிறது என்று அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.