புதிய சீரியலில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர் பிரபலம் – யார் எது தெரியுமா.? வியப்பில் இல்லதரசிகள்.!

pandian-store-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்கள் பலரின் கவனத்தை திசைதிருப்பி ஃபேவரட் சீரியலாக ஒளிபரப்பாகி வருவது பாண்டியன் ஸ்டோர் தொடர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திலும் சற்று மாறுபட்ட கான்செப்ட் உடன் பாண்டியன் ஸ்டோர் ஒளிபரப்பாகி வருகிறது.

மற்ற தொடர்களில் ஹீரோ ஹீரோயின் அவர்களை பிரிக்க வில்லன் அல்லது வில்லி  போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் செயல்படுவார்கள். ஆனால் பாண்டியன் ஸ்டோர் தொடரில் மட்டும் ஒரு கூட்டுக் குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து எடுத்து வருகின்றன.

இதில் நான்கு அண்ணன் தம்பி அவர்களை திருமணம் செய்து கொண்டு வரும் நான்கு பெண்களுமே ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் தற்போதுதான் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி சொந்தக்காரர்களின் பேச்சால் கதிர் முல்லை வீட்டை விட்டு வெளியேற மூர்த்திக்கு இதய அடைப்பு வந்துவிட்டது அதற்கு பணத்திற்காக பாண்டியன் ஸ்டோர் குடும்பம் ஏற்பாடு செய்து வருகின்ற நிலையில் மீனாவின் அப்பா பணத்தை கட்டி ஆப்ரேஷன் செய்ய சொல்லி உள்ளார். இப்படி பல திருப்பங்களுடன் தற்போது பாண்டியன் ஸ்டோர் ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் இந்த தொடரில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின்.

தொடர்ந்து இந்த சீரியலில் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள பச்சைக்கிளி என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்த புதிய தொடருக்கான ப்ரோமோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.moorthy new serial