உருகி உருகி காதலித்த காதலனை கரம் பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர் நடிகை.!

pandiyan stores 3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதோடு இந்த சீரியல் அண்ணன்-தம்பி பாச உறவுகளை மையமாக வைத்து இயக்கப்படுவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்குகிறது. அந்த வகையில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுஜிதா இவர் தனம் கேரக்டரில் அண்ணியாக நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து ஸ்டாலின் இவரும் வெள்ளித்திரையில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  நடிகர் குமரன் இவரும் சமீபத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். வெங்கடேஷ், சரவணன் விக்ரம், ஹேமா உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலம் அடைந்துள்ள இந்த சீரியல் தெலுங்கு,  மராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட இன்னும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் மீனா கெரக்டரில் ஹேமாவுக்கு பதிலாக கவிதா கவுடா நடித்திருந்தார்.

பிறகு இவர் கன்னட பிக்பாஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இவர் முதலில் மகாபாரதம் தொடரின் மூலம் தான் தமிழ் சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் கன்னடத்திலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடன் இணைந்து லக்ஷ்மி பிரம்மா தொடரில் நடித்திருந்த சந்தன்குமாரை காதலித்து வந்தார்.

சமீபத்தில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவ்வ போது எடுத்த சில புகைப்படங்களை கவிதா கவுடா தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

kavitha kavta
kavitha kavta