விஜய் டிவி தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் தொடர் தற்பொழுது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன.
அதன் காரணமாக பாரதிகண்ணம்மா போன்ற ஹிட் சீரியலையும் பின்னுக்கு தள்ளி முன்னுக்கு சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா முதலில் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார்.
மேலும் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாதியில் பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென இறந்ததால் அவருக்கு பதிலாக இவர் கமிட்டானார். சித்ரா இழப்பை பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அந்த தொடரில் கதிர் முல்லை ஜோடிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அதனால் சித்ரா ரோலுக்கு காவியா நடிக்க வந்ததால் ஆரம்பத்தில் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள சற்றுத் தயக்கம் காட்டினார் இருந்தாலும் காவியா தொடர்ந்து நடித்து வந்தார் . காவியா எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். டெய்லி போட்டோஷூட் களை நடத்தி புகைப்படங்களை அள்ளித் தெளிப்பார்.
இவரது புகைப்படங்களுக்கு மயங்கிய ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அவரை பின்பற்றவும் தொடங்கினர். தற்போது அவர் மணப்பெண் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் ட்ரெண் ஆக்கி வருகின்றனர்.