மீனா – முல்லை பேசிக்கொண்டிருப்பதை ஓட்டு கேட்ட ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர் பரபரப்பான தருணங்கள்

Pandian store
Pandian store

Pandian store : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில்.. முல்லையும் மீனாவும் தனத்தின் குழந்தையை பார்த்து கொஞ்சுகின்றனர் அவர்களிடம் தனம் பாப்பா கை, கால் எல்லாம் நல்லா இருக்கா ஆரோக்கியமா இருக்கான்னு கேள்வி கேக்குறாங்க மீனா அதெல்லாம் குழந்தை ரொம்பவே அழகா இருக்கு அக்கான்னு சொல்ராங்க உடனே அங்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் குழந்தையை பார்க்க வராங்க..

ஐஸ்வர்யா குழந்தைய பாத்துட்டு தனத்துகிட்ட உங்களுக்கு டெலிவரி டேட் இன்னும் ஒரு மாசம் இருக்கு அதுக்குள்ள எப்படிக்கா இன்னைக்கு தான் குழந்தை பிறக்க போகுதுன்னு தெரிஞ்சு நேற்று நீங்க ரெடியானிங்கன்னு கேக்குறதுக்கு தனம் நீ குழந்தைய பார்க்க தான வந்த குழந்தையை பாரு என்ன தேவை இல்லாம கேள்வி கேட்காதேன்னு சொல்றாங்க அப்புறம் ஐஸ்வர்யாவும் குழந்தைய பாத்துட்டு உடனே வீட்டுக்கு போயிடுறாங்க..

அப்புறம் வீட்ல இருந்த கஸ்தூரி கதிர் முல்லை கிட்ட அடுத்தடுத்து வெறும் பொம்பள புள்ளையா பொறக்குது ரொம்ப கஷ்டம் ஆச்சே மீனாவுக்கும் அண்ணன் இல்ல முல்லைக்கும் அண்ணன் இல்லை ஐஸ்வர்யாவுக்கும் என் புருஷன் சித்தப்பாவாச்சி அதனால பொறக்குற எல்லா பிள்ளைங்களுக்கும் தாய் மாமா சீர் செஞ்சே என் புருஷன் ஏழையாயிடுவாரு போல அப்படின்னு சொல்றாங்க..

அதற்கு கதிர் தாய் மாமா சீருமே சித்தப்பா பெரியப்பா நாங்களே செஞ்சுகிறோம் உங்களுக்கு அவ்வளவு கஷ்டம் வேணாம் அக்கான்னு சொல்றாரு அப்புறம் கஸ்தூரி கிட்ட கதிர் உங்களுக்கு அண்ணன் இல்ல உங்க பையன் ஆகாஷ் கல்யாணத்துக்கும் தாய் மாமா சீர் செய்ய நாங்க நாலு பேருந்தான் செஞ்சாகணும்னு ஜாலியா பேசிட்டு இருக்காங்க..

ஹாஸ்பிடல்ல கண்ணன் தனியா ஒரு இடத்துல இருக்காரு அப்ப அந்த பக்கமா போன ஜீவா என்ன கண்ணா தனியா நிக்குற அப்படின்னு கேக்குறதுக்கு இல்லன்னா நம்ம குடும்பத்தில் இருக்கிறவர்களை பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியாருக்கு இப்படிப்பட்ட வேலையெல்லாம் எனக்கு கிடைத்ததே ரொம்ப பெரிய விஷயம் ஆனா நான் லஞ்சம் வாங்கி இப்ப அந்த வேலையை எனக்கு போயிடுச்சு..

அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசுறாரு அதுக்கு ஜீவா அது எல்லாம் கேஸ் கோர்ட்டுக்கு வரட்டும் நீ லஞ்சம் வாங்கல இல்ல அத நிரூபித்து சரி பண்ணிடலான்னு சொல்றாரு அதுக்கு கண்ணன் இப்ப நா லஞ்சம் வாங்கல அண்ணா ஆனால் இதுக்கு முன்னாடி நான் லஞ்சம் வாங்கி இருக்கேன்னு சொல்றாரு..

இதைக்கேட்டு ஜீவா ஷாக்காகி என்னடா சொல்ற லஞ்சம் வாங்குனியா இந்த தைரியம் எல்லாம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்பதற்கு கடன் இருந்தது அதனாலதான் லஞ்சம் வாங்கிட்டேன் அப்படின்னு சொல்றாரு ஜீவா நீ யார் யார்கிட்ட லஞ்சம் வாங்கினேன்னு ஞாபகம் வச்சிருக்கியா..

அவங்க கிட்ட எல்லாம் அந்த பணத்தை திரும்பி கொடுத்து விடலாம் பணம் நான் ஏற்பாடு பண்றேன்னு சொல்றாரு.. வீட்டுக்கு வந்த முல்லையும் மீனாவும் ரூம்ல போய் கதவை சாத்திட்டு அடுத்து அக்காக்கு எப்படி ட்ரீட்மென்ட் பண்றது வீட்ல என்ன சொல்றது அக்காவ சமாளிக்கணும் என்ன பண்ணலான்னு பேசிட்டு இருக்காங்க..

அப்புறம் கதவை திறந்தால் வெளியே ஐஸ்வரியும் கஸ்தூரியும் நிக்கிறாங்க என்ன ரெண்டு பேரும் ரூம்ல தனியா பேசிட்டு இருந்தீங்க என்கிட்ட சொல்லுங்கன்னு ஐஸ்வர்யாவும் கஸ்தூரியும் மாறி மாறி கேக்குறாங்க அதுக்கு மீனாவும் முல்லையும் உண்மைய சொல்லல ஐஸ்வர்யா உடனே நானே கண்டுபிடிக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க. இதோட இந்த எபிசோடு இன்று முடிவடைந்துள்ளது.