திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து குழந்தையை பெற்றெடுத்த ‘பாண்டவர் இல்லம்’ சீரியல் நடிகை.! என்ன குழந்தை தெரியுமா.?

anu
anu

5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது பாண்டவர் இல்லம் சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து தங்களுடைய டிஆர்பியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வரும் நிலையில் தற்பொழுது இந்த தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டவர் இல்லம். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த சீரியல் குடும்பம், காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த வகையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் பாப்பிரிகோஷ், நரேஷ், ஈஸ்வரன், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். அந்த வகையில் ஐந்து மருமகள்களில் ஒருவராக ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை அனு.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆஃபீஸ் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் பிறகு தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த பிரபலமானார். இப்படிப்பட்ட நிலையில் இவர் விக்னேஷ் என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கழித்து அணு கர்ப்பமாக இருந்த நிலையில் அந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது.

anu 1
anu 1

மேலும் தன்னுடைய கணவர் ஒருவரை மட்டுமே வைத்து வளைய காப்பு நடத்தி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை அனுவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் எனவே அனைவரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.