பஞ்சதந்திரம் 2 பாகம் எடுக்கலாம் ஆனா தலைவரு மனசு வைக்கனும் – மத்த எல்லாம் ரெடி.! பிரபல நடிகர் போட்ட புதிய ட்வீட்.

panchathanthiram
panchathanthiram

தமிழ் சினிமாவில் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தும் நடிகர் கமல் இதுவரை கெட்டப்போடுவதே கிடையாது அந்த அளவிற்கு பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ள தோடு அந்த படத்திற்காக எந்த அளவு வேண்டுமானாலும் இறங்கியதால் அவருக்கென ஒரு இடம் சினிமா உலகில் இருந்து கொண்டே இருக்கிறது.

இவரது திரைப்படங்கள் காமெடியாகவும் அதே சமயம் சிந்திக்க வைக்கும் படியும் இருக்கும். அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படம் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்தது இந்த படம் முழுக்க முழுக்க பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும்  படமாக தான் இருந்தது.

இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், யூகி சேது, ரமேஷ், அரவிந்து போன்றோர் பலரும் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் அவர்களில் ஒருவராக காமெடியில் நடித்தவர்  ஸ்ரீமன். இவரை சமிப காலமாக ரசிகர்கள் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா வராதா என தினமும் கேட்டு அவரை கைது செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகிய ஸ்ரீமன் அதற்கும் பதில் அளித்துள்ளார் அவர் கூறியது பஞ்சதந்திரம் படம் நிச்சயம் வரும் ஆனால் அது எடுக்க கமல்ஹாசன் மனசு வைத்தால் மட்டுமே நடக்கும் எனவும், மற்றபடி படக்குழுவினர் அனைவரும் அந்த படத்தை எடுக்க ஆர்வமாக தான் உள்ளார்கள் எனவும் கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

panchathanthiram
panchathanthiram

ஆனால் கமலோ தற்பொழுது இந்தியன் 2 விக்ரம் ஆகிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இதுவே இன்னும் முடிந்தபாடில்லை அதற்குள் பஞ்சதந்திரம் இரண்டாம் பாகம் வேறயா என சிரித்தபடியே ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.