தனுஷின் 50வது படத்தில் நடிக்க மறுத்த பான் இந்திய நடிகை.! கைவிடாத நம்ப கனவு கன்னி..

dhanush 1
dhanush 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் தனுஷ் இதுவரையும் இல்லாத அளவிற்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தது தனுஷ் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்காக பல இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். இதனை அடுத்து தனுஷின் 50வது திரைப்படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் சமூக வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த படத்தினை தனுஷ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே தனுஷின் 50வது படத்தில் இவருக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் கங்கனா நடிக்க மறுத்துவிட்டாராம்.

இவ்வாறு இவர் வேண்டாம் என தவிர்த்ததால் இந்த படத்தில் ஹீரோயின் ஆக திரிஷா நடிக்க போவதாக கூறப்படுகிறது. தற்பொழுது நடிகை திரிஷா விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதற்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்த நிலையில் இவருடைய மார்க்கெட் சினிமாவில் உயர்ந்துள்ளது.

இதற்கு முன்பு த்ரிஷா தனுஷ் உடன் இணைந்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு சில வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.