தமிழ் சின்னத்திரையில் பல சீரியல் ஓடிக்கொண்டு இருந்தாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சியில் குடும்பத்தை தழுவி எடுக்கப்படுவதால் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு பலர் குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருக்கிறது. இதேபோன்று பல குடும்ப சீரியல்கள் மிகவும் பரபரப்பான நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, போன்ற சீரியல் டிஆர்பி-யில் முன்னணி பட்டியலாக இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு சீரியலும் வாரந்தோறும் புது புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி டிஆர்பி-யில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 26 ஆவது வாரத்திற்கான பட்டியல் வெளியாகி உள்ளன. அதில் குடும்ப சீரியலான மூன்று சீரியல் முதல் மூன்று இடத்தையும் பெற்றுள்ளன.
எனில் 8.9 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 7.8 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. 7.5 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 6.5 புள்ளிகளை பெற்று தமிழும் சரஸ்வதியும் சீரியல் நான்காவது இடத்தை வெற்றிகரமாக பிடித்துள்ளது. மேலும் 6.0 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல்.
இதைத்தொடர்ந்து 6.0 புள்ளிகளை பெற்று ராஜா ராணி சீசன் 2 சீரியல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. 5.7 புள்ளிகளை பெற்று மௌனராகம் சீசன் 2 சீரியல் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. பின் முத்தழகு சீரியல் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது. இதேபோன்று பல சீரியல்கள் ஒவ்வொரு இடத்தையும் பிடித்து நிலை நிறுத்தி வருகின்றனர்.
எனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் அவர்களுக்கான இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வருகின்றனர் இதை தொடர்ந்து பல சீரியல்கள் புதிது புதிதாக ஒளிபரப்பாகி வருகின்றன அதற்கும் ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.