பாக்கியா.. ராதிகாவை சந்திக்காமல் இருக்க.. ஆஃபர் கொடுக்கும் கோபி.! ஷாக்கான குடும்பம்.

pakkiyalaxmi
pakkiyalaxmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடர் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த கதை களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவரும் சுஜித்ரா.

சிறந்த ஹீரோயின் விருதும் வாங்கியுள்ளார். இந்த சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி பெரும் பிரச்சனையை சந்தித்து உள்ளதால்  பாக்யாவின் மகன் எழில் தனது அம்மாவை மீட்டு வீடு திரும்பிய நிலையில் பாக்யாவின் கணவர் கோபி உனது சமையல் பிஸினஸ் எல்லாத்தையும் இழுத்து மூடிவிட்டு வீட்டிலேயே இரு என கோபமாக கூறியுள்ளார்.

இதையடுத்து பாக்கியலட்சுமி ராதிகாவை சந்தித்து பேசும்போது  வீட்டில் நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளார். ராதிகாவும் என்னால் தான் இவ்வளவு பிரச்சனை என மிகவும் வருத்தப்பட்டு உள்ளார். அதனால் இந்த பிரச்சனையை சரிசெய்ய பாக்யாவின் கணவரை சந்தித்து பேசலாம் என ராதிகா முடிவெடுத்துள்ளார்.

இதனை ராதிகா பாக்யாவின் கணவர் கோபி தான் என்று தெரியாமலேயே கோபியிடம் போய் நாம் பாக்யாவின் கணவரை சந்தித்து பேசி பாக்யாவின் பிசினஸை மீண்டும் தொடர்ந்து நடத்த வைக்கலாம் என கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி நானே பாக்கியலட்சுமியின் கணவரை சந்தித்து பேசுகிறேன் என கூறியுள்ளார்.

பின்பு வீட்டிற்கு வந்த கோபி பாக்கியவிடம்  நீ உனது பிசினஸை மீண்டும் நடத்து என சம்மதம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட வீட்டில் உள்ள மற்ற உறவினர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர். திடீர் என்று கோபி எப்படி இப்படி மாறினார் எனவும் பலரும் யோசிக்கின்றனர்.