வெள்ளித்திரைக்கு ஈடு இணையாக சமீப காலமாக சின்னத்திரையும் சிறப்பாக வளர்ந்து வருகின்றன அந்த வகையில் பிரம்மாண்ட செலவில் பிக் பாஸ் சர்வைவர் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மக்களை கவரும் வகையிலும் அமைகின்றன.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் போன்ற அனைத்தும் மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சிகளாகும். மற்ற சேனல்களில் சீரியலை வைத்தே டிஆர்பியை பெற்று வரும் நிலையில் விஜய் டிவி மட்டும் சற்று வித்தியாசமாக பல புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை நடத்தி டிஆர்பியை உயர்த்தி கொள்கின்றனர்.
அப்படி விஜய் டிவியில் வருடம் வருடம் ஒளிபரப்பாகி வரும் விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்காக மக்கள் பலரும் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் நமக்கு பிடித்த நடிகர், நடிகைகள், சீரியல், காமெடி நிகழ்ச்சிகள் போன்றவை விருது வாங்குகிறதா என ஆவலாக எதிர்பார்த்து வருவார்கள்.
அந்த வகையில் இந்த வருட விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. இதில் பெஸ்ட் சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி சீரியல் பெற்றது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகி சுஜித்ரா சிறந்த அம்மா சிறந்த நடிகை போன்ற பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறந்த குடும்பத்திற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் விருது வாங்கியது மேலும் பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர் விருது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துவரும் நக்ஷத்ரா மற்றும் வெங்கட் வாங்கியுள்ளனர். இது போன்ற பல விருதுகளை விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் வாங்கியுள்ளனர்.