சின்னத்திரையில் பொழுதுபோக்கிற்காக பல டிவி நிகழ்ச்சிகளிலும் காலை முதல் இரவு வரை பல சீரியல்களை ஒளிபரப்ப செய்து வருகின்றன அதிலும் குறிப்பாக ஒரு சில சீரியல்கள் மக்கள் பலருக்கும் பிடிக்கப்பட்டு விரும்பி பார்த்து வருகின்றன மேலும் அந்த சீரியல் டிஆர்பி யிலும் டாப் லிஸ்டில் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் மக்கள் பலரின் கவனத்தை திசைதிருப்பி ஃபேவரட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் தற்போது முக்கிய கதைக்களம் நகர்ந்து வருகிறது கோபி நீண்ட நாட்களாக தனது மனைவி மற்றும் காதலி என இருவரையும் ஏமாற்றி வந்த நிலையில் அந்த உண்மை.
தற்போது அவரது காதலி ராதிகாவிற்கு தெரிய வந்துள்ளது அதனால் அவர் அடுத்து என்ன முடிவு எடுக்க உள்ளார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர் இப்படி தற்போது நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் நடித்து வரும் சுஜித்ரா, ரேஷ்மா, விஷால், ரித்திகா, திவ்யா கணேஷ் திவ்யா, சதீஷ் போன்ற பலரும் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம்.
இந்த நிலையில் இதில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் அவரது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் எழில் குறித்து தற்போது ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதாவது அவர் வேறு ஒரு சீரியலிலும் நடிக்க உள்ளாராம் என்ற தகவல் வெளிவந்துள்ளது அதன்படி விஜய் டிவியில் மற்றொரு ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் ஒரு சின்ன ரோலில் விஷால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.