சின்ன குழந்தைங்க போடுற ஸ்கூல் யூனிபார்மை மாட்டிக்கொண்டு நடனம் ஆடிய பாக்கியலட்சுமி ராதிகா.! வைரலாகும்வீடியோ.!

reshma
reshma

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பல நடிகர் நடிகைகளுக்கும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் ஒரு முக்கிய அங்கமாக அமைகின்றன அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்து சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றனர்.

கடந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா. இவர் விஷ்ணு விஷால் சூரி நடிப்பில் வெளிவந்த வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தவர்.

மேலும் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் பிரபலமடைந்து காணப்பட்டார். அதன்பிறகு தற்போது விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாக்யலக்ஷ்மி தொடரில் ரேஷ்மா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ரீச் அடைந்து காணப்படுகிறார். மேலும் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வரும் ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள போட்டிக்கு போட்டி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

அதற்காக ரேஷ்மா ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து சின்னப்பொண்ணு போல நான் ஸ்கூலுக்கு போறேன் பாய் என பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஸ்கூல் கேட்டப் வீடியோவில் ரேஷ்மா எப்படி உள்ளார் என்பதை இந்த வீடியோவில்  நீங்களே பாருங்கள்