பாக்கியலட்சுமி சீரியல் எழில் இந்த நடிகையை தான் காதலிக்கிறாராம்.! வைரலாகும் தகவல்.

yezhil 1
yezhil 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அந்தவகையில் தனது சிறந்த நடிப்பின் மூலம் பாசிட்டிவான கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளவர் தான் நடிகர் விஷால்.  இந்த சீரியலில் இவர் குடும்பத் தலைவியாக கஷ்டப்படும் வரும் பாக்கியாவின் இரண்டாவது மகனாக நடித்து வருகிறார்.

பாக்கியாவை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எதிர்த்து வந்தாலும் இவர் ஒருவர் மட்டும் தான் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை அம்மாவிற்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறார். பிறகு தனது கணவரை இழந்து ஒரு பெண் குழந்தையுடனும், தனது மாமனார், மாமியாருடனும் வாழ்ந்து வரும் அமிர்தாவை காதலித்து வருகிறார்.

அமீர்தாவிடம் காதலை கூறியுள்ள நிலையில் தற்பொழுது அமிர்தாவும் இதற்கு ஓகே சொல்ல உள்ளார்.  இவ்வாறு பிரபலமடைந்து வரும் எழில்  நிஜ வாழ்க்கையில் சின்னத்திரை நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த வாரம் விஜய் டிவியில் விருது பெறும் நிகழ்ச்சி நடந்தது அதில் விஷாலுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசும் பொழுது டீமுக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தார். ஆனால் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் ரியா விஸ்வநாதனை எழில் பேசும்போது அதிகம் காட்டி இருந்தார்கள்.

reeya 12
reeya 12

எனவே இதனை கவனிக்க ரசிகர்கள் விஷால் மற்றும் ரியா காதலித்து வருகிறார்கள் என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் இவர்களுக்கிடையே லவ் இருக்கிறது என்று   வெளிப்படையாகவே பேச தொடங்கியிருந்தனர். எனவே இவர்கள் எதனைப் பற்றி இவர்கள் கூறினால் மட்டுமே இதற்கு விளக்கம் கிடைக்கும்.