விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதுவும் முக்கியமாக கோபி கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் சதீஷ் தொடர்ந்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அதாவது கோபி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இவர் எப்படியெல்லாம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஏமாற்றுகிறார் என்பதை மையமாக வைத்துதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் கோபி கேரக்டரும் ஒன்று தான். இவருக்கு இந்த சீரியலின் மூலம் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் தொடர்ந்து இவர் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் ரசிகர்களுக்கு நான் நிஜ வாழ்க்கையில் இப்படி கிடையாது அவர் ஸ்கிரிப்ட் தராங்க அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற இதற்கு ஏன் என்ன திட்டுறீங்க என்று பலமுறை ரசிகர்களிடம் கூறி வருகிறார். சதீஷ் இந்த சீரியலுக்கு முன்பே மற்றொரு சீரியலிலும் வில்லனாக நடித்திருக்கிறார்.
அதாவது இவருடைய இளம் வயதில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடரில் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் அந்த சீரியலில் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த சீரியல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.