ஒரே வருடத்தில் ஆறு திரைப்படங்கள்..! வெற்றி மேல் வெற்றி கண்ட பாக்கியராஜ்..!

bakiyaraj-1

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியில் திரைப்படம் இயக்கி மாபெரும் வெற்றி கண்டு வந்த ஒரு நடிகர் என்றால் அது பாக்யராஜ் தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ரஜினி கமல் இருந்த காலகட்டத்திலே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் என்று சொல்லலாம்.

அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் காமெடி கலந்த கதாபாத்திரமாக இருப்பது மட்டும் இல்லாமல் இவருடைய திரைப்படங்களை இவரை இயக்கி நடிப்பது வழக்கம். ஒரே ஆண்டில் சுமார் ஆறு திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார். இதில் நான்கு திரைப்படங்கள் இவர் இயக்கி நடித்தது மட்டும் இல்லாமல் இரு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

indru poi naalai vaa
indru poi naalai vaa

“மௌன கீதங்கள்” திரைப்படம் ஆனது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ் நடித்த இயக்கியது மட்டும் இல்லாமல் அவருடன் சரிதா, கல்லாப்பெட்டி சிங்காரம் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்திருப்பார்கள் கங்கை அமரன் இசையில் வெளிவந்த இந்த திரைப்படப் பாடல்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியை கொடுத்தது.

“இன்று போய் நாளை வா” என்ற திரைப்படம் பாக்யராஜ் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்தது மட்டும் இல்லாமல் கல்லாபட்டி சிங்காரம் காந்திமதி ராதிகா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் பல நாள் தியேட்டரில் கல்லா கட்டியது.

“விடியும் வரை காத்திரு” திரைப்படம் ஆனது பாக்யராஜ் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் கராத்தே மணி சங்கிலி முருகன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படமும் இளையராஜாவின் இசையில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த ஏழு நாட்கள் இந்த திரைப்படத்தை பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் அவருடன் ராஜேஷ் அம்பிகா கவுண்டமணி கல்லாபெட்டி சிங்காரம் போன்றவர்கள் நடித்த இந்த  திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மாபெரும் ஹிட்.

ஏக் ஹை பூல் திரைப்படம் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இதில் கதை மற்றும் இயக்கம் பாக்யராஜின்  திறமையை கனிசமாக காட்டியது.

மேலும் இது அந்த ஏழு நாட்கள் படத்தின் ரீமேக்  தெலுங்கில் வெளியானது இந்த திரைப்படத்தின் திரைகதையை நடிகர் பாக்யராஜ் அவர்கள் தான் இயக்கி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சந்திரமோகன் பாபு ஆகியவர்கள் நடித்த மாபெரும் வெற்றி கண்டுள்ளார்கள்.