தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி கிங் என்ற அந்தஸ்தை இதுவரையிலும் தக்க வைத்து உள்ளவர் கவுண்டமணி ஏனென்றால் மற்ற நடிகர்கள் அடிவாங்கி சிரிக்க வைப்பார்கள் ஆனால் தனது பேச்சின் மூலம் மற்றவர்களை சிரிக்க வைத்தவர் சிந்திக்கவும் வைத்தவர் கவுண்டமணி தான்.
90 கால கட்டங்களில் புகழ்பெற்ற ஒரு காமெடி நடிகராக இருந்தார். இப்பவும் ஒன்னு ரெண்டு படங்களில் தலை காட்டி வருகிறார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்பை கைப்பற்ற ரொம்பவும் கஷ்டப்பட்டார். முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓடினார் ஒரு கட்டத்தில் இவர் 16 வயதினிலே படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
அதன் பிறகு இவர் கிழக்கே போகும் ரயில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த கதாபாத்திரம் அப்பொழுது பெரிய அளவில் கொண்டாடப்பட்டது அதன் பிறகு இவருக்கு சினிமா உலகில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் கிழக்கே போகும் ரயில் படம் இவருக்கு முதலில் கிடைக்கவே இல்லை அதை சண்டை போட்டு வாங்கி கொடுத்தவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது அதைக் குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலிக்கு அக்கா கணவராக நடிக்க முதலில் பாரதிராஜா டெல்லி கணேஷ் என்பவரை தான் தேர்வு செய்தார் ஆனால் பாக்கியராஜ் கவுண்டமணிக்கு வீக் வைத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து டெஸ்ட் பார்த்தார். கவுண்டமணி சூப்பராக நடித்ததால் படக்குழுவினர் அனைவரும் பாராட்டினர். ஆனால் பாரதிராஜா அந்த கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் தான் நடிக்க வைக்க வேண்டும் என ஒரே பிடிவாதமாக இருந்தார்.
பாக்கியராஜ் சண்டை போட்டு ஒரு வழியாக அந்த கதாபாத்திரத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க சம்மதம் வாங்கினார் பிறகு இந்த தகவலை கவுண்டமணியிடம் சொல்ல பாக்கியராஜ் கிளம்பினார். எல்டாம்ஸ் சாலையில் நடு சாமத்தில் வந்திருக்கிறார் பாக்யராஜ் இதை பார்த்த கவுண்டமணி என்ன இந்த நேரத்தில் எனக் கேட்க உங்களுக்கு கிழக்கு போகும் ரயில் பட வாய்ப்பு கிடைத்ததாக கூற அங்கேயே கதறி அழுதாராம் கவுண்டமணி இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாக்யராஜ் கூறினார்.