விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தற்பொழுது டிஆர்பி-யில் நம்பர் ஒன் சீரியலாக இந்த சீரியல் விளங்குகிறது மேலும் கோபி தற்பொழுது பல பிரச்சினைகளுக்குப் பிறகு பாக்யாவிடமிருந்து விவாகரத்தை பெற்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் கோபி பாக்கியாவை மிகவும் கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்.
இதோடு நேற்று எபிசோட் நிறுத்தப்பட்டது இதன் காரணமாக இந்த தொடரை பார்க்கும் சீரியல்கள் அனைவரும் கோபியை தான் திட்டி வருகிறார்கள் அந்த ரோலில் நடித்து வரும் சதீஷ் தற்பொழுது தன்னை திட்டுபவர்களை பற்றி பேசி இருக்கிறார். அதாவது இது வெறும் நடிப்பு மட்டும் தான் என மன்னிப்பு கேட்டுள்ளார்.
அது குறித்து கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் என்னென்ன நடக்கிறது என்பது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் கடந்த ஐந்து நாட்கள் ரொம்ப மோசமாக இருந்து வருகிறது என்பது தெரிந்தது. தெரிந்தோ தெரியாமலோ கோபி கேரக்டர் மூலமாக உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் இது வெறும் நடிப்பு மட்டும் தான்.
எனக்கு தெரியும் சில பேர் என்னை வருத்தப்பட வேண்டாம் என சொல்கிறீர்கள். இப்படி நடிக்கும் எனக்கே மனசு கஷ்டமா இருக்கு சீரியல் விட்டு விலகிவிடலாம் என்றும் தோன்றுகிறது ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் இல்லையா. என் காரணமாக தான் இந்த சீரியலில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் சதீஷ் தொடர்ந்து ரசிகர்களிடம் இது வெறும் நடிப்பு மட்டும் தான் எனவே என்னை திட்ட வேண்டாம் எனக் கூறி வந்தாலும் ரசிகர்கள் வழக்கம்போல் திட்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதனால் சதீஷ் மனவருத்தத்திற்கு ஆளாகியுள்ளார் என்பதை இந்த வீடியோவின் மூலம் தெரிகிறது மேலும் சில ரசிகர்கள் சதீஷ்க்கு ஆறுதல் கூறுபவர்களும் இருந்து வருகிறார்கள்.
மன்னிச்சிடுங்க.. இது வெறும் நடிப்பு தான்! #Gopi #Baakiyalakshmi pic.twitter.com/YQxlqpRR8J
— Parthiban A (@ParthibanAPN) August 12, 2022