பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் TRP-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக பல புதுமுக நடிகை, நடிகர்கள் மற்றும் வித்தியாசமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் என்று பலவற்றையும் ஒளிபரப்பாகி வருகிறார்கள்.
அந்த வகையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது இன்னும் சில சீரியல்கள் முழுவதும் கதை மாற்றத்துடன் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து சில சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது. அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் எவ்வளவு பிரச்சனைகள் மற்றும் அவமானங்கள், கஷ்டங்களை கடந்து செல்லவேண்டும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. எனவே இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கோபி என்ற கேரக்டரில் சதீஷ் என்ற புதுமுக நடிகர் அறிமுகமாகியுள்ளார்.
இந்த சீரியலில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.எனவே இவரை ரசிகர்கள் திட்டி வந்தார்கள். இந்நிலையில் சதீஷ் நான் என்ன பண்றது பணம் கொடுக்கிறார்கள் நான் நடிக்கிறேன் என திட்டாதீர்கள் என்று கூறி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது தான் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் என்று நினைத்து வருகிறோம். ஆனால் இதற்கு முன்பு சில சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார். அந்தவகையில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்துள்ள ஒரு காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.