கோபத்தின் உச்சியில் இருக்கும் ராதிகாவை சமாதானம் செய்யும் பாக்கியா – திசை திரும்பும் கதை.! இன்றைய ப்ரோமோ..

pakkiyalaxmi-serial
pakkiyalaxmi-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி தொடரில் தற்போது மக்கள் பலரும் எதிர்பார்த்த கதையின் முக்கிய திருப்பங்கள் வெளிப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி தனது மனைவி மற்றும் கள்ள காதலி என இருவரையும் ஏமாற்றி..

வந்த நிலையில் சமீபத்தில் அவர் குடித்துவிட்டு தனது காதலி ராதிகாவிடம் போதையில் அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து உள்ளார்.  அதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியாகி உள்ள ராதிகா டீச்சர் தான் உங்கள் மனைவி என்பதை இத்தனை நாள் என்னிடம் மறைத்து பேசி வருகிறீர்களே..

என கோபமாக என் வீட்டிற்கு இனி வராதீர்கள் என கூறியுள்ளார்.  பின்பு அடுத்த நாள் கோபி வீட்டிற்கு வரும் போதும் ராதிகா வீட்டிற்கு வராதீர்கள் என துரத்திவிட்டு உள்ளார். இப்படி மிக மன உளைச்சலில் ராதிகா இருக்கும் சமயத்தில் பாக்கியா வீட்டிற்கு வருகையில் பாக்கியா விடம் ராதிகா.

என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சொன்னவர் நல்லவரே கிடையாது என்னை ஏமாற்றி விட்டார் அவர் குடும்பத்தைப் பற்றி அவர் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொய் என்று இப்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது இந்த கல்யாணம் நடக்காது என மிகவும் வருத்தப்பட்டு கூறுகிறார் அதற்கு பாக்கியா முதலில் அதிர்ச்சியாகி பின்பு நீங்கள் ஆசைப்பட்டபடி..

அவருடன் திருமணம் நடக்கும் என ராதிகாவிற்கு தனது கணவர் தான் ராதிகாவை ஏமாற்றியவர் என தெரியாமலேயே பாக்கியா ராதிகாவிற்கு சமாதானம் கூறி வருகிறார் இப்படி தற்போது பாக்கியலட்சுமி கதைகளம் நகர்ந்து வருகிறது ஆனால் கோபி ராதிகா அல்லது பாக்கியா இருவரில் யார் உடன் செல்வார் என்பது கூடிய விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.