கண்ணம்மா ஸ்டைலில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா.. புதிய திருபங்களுடன் வெளியான பரபரப்பு ப்ரோமோ.

bakkiyalakshmi
bakkiyalakshmi

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் கடந்த ஒரு வாரமாக டிஆர்பி யில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றன ஏனென்றால் மக்கள் பலரும் எதிர்பார்த்த முக்கிய நிகழ்வு தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வளவு நாள் பாக்யாவுக்கு தெரியாமல் கோபி இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை நேரடியாக பாக்கியா பார்த்து அதிர்ச்சியாகி கோபியை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்டு வருகிறார். இவ்வளவு நாள் ஒரு குடும்பத்தை ஏமாற்றி வருகிறீர்களே என அனைத்து உண்மைகளையும் கூற குடும்பமே ஆச்சரியத்தில் நிற்கின்றன.

இருந்தும் கோபியின் அம்மா ஈஸ்வரி மட்டும் தன் பையன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என ஒரு பக்கம் கோபிக்காக பேசி வருகிறார். பின்பு ஒரு கட்டத்தில் பாக்கியா இவ்வளவு நாள் இவர் ராதிகா இடம் தான் பேசி வந்தார் என்ற உண்மையை உடைக்க குடும்பமே ஷாக்காகி உள்ளன. இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பாக்கியா இவ்வளவு நாள் சொந்த குடும்பத்தையே இப்படி நம்ப வச்சு ஏமாற்றி விட்டீர்களே என கோபமாக பேசி உங்களுக்கு பிடித்த மாதிரி இனி உங்க வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள் ஆனால் இனி உங்களை நம்புறதுக்கு ஏமாளியா, முட்டாளா நான் இங்கு இருக்க மாட்டேன் என அதிரடியாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.

பாக்கியாவை வீட்டை விட்டு போக விடாமல் தடுக்க இனியா செழியன் போன்றவர்கள் பதட்டத்துடன் ஓடி வருகின்றனர். இப்படியான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதோ அந்த ப்ரோமோ வீடியோ..