கோபி ராதிகாவின் உறவை கண்ணெதிரே பார்த்து அதிர்ச்சியான பாக்கியா.. வெளியான அதிரடி ப்ரோமோ.!

bakkiyalakshmi
bakkiyalakshmi

விஜய் டிவியில் மக்களின் மனம் கவர்ந்து பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது கதையின் முக்கிய திருப்பத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கோபி தனது கள்ளக்காதலி ராதிகாவிடம் பேசி வந்த உண்மை இதுவரை வீட்டில் எழில் மற்றும் தாத்தா இருவருக்கும் தெரிந்து வந்த நிலையில்

தற்போது இந்த உண்மை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.  தாத்தா ஈஸ்வரி இடம் உன் மகன் நீ நினைக்கிற மாதிரி இல்ல அவன் நல்லவனே கிடையாது என கூறியதால் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கின்றன இதனால் ஈஸ்வரி கோபிக்கு போன் செய்து உடனே நீ வீட்டுக்கு வா உன்னை பற்றி என்னென்னமோ சொல்கிறார்கள்

என சொன்னதும் கோபி பரபரப்பாக என்ன நடந்ததோ என தெரியாமல் வேகமாக கார் ஓட்டி வந்ததால் அவரது கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அப்போது மனைவி நம்பர் கொடுங்கள் என நர்ஸ் கோபியிடம் கேட்டதும் ராதிகா மற்றும் பாக்யலட்சுமி இருவருடைய நம்பரும் கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து இருவருக்கும் போன் செய்து தகவலை கூறியதால் ராதிகா மற்றும் பாக்யா இருவருமே பதட்டத்துடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர் அங்கு முதலில் ராதிகா வந்ததால் நர்ஸ் நீங்கதான் கோபியின் மனைவியா என கேட்க ஆமாம்  என கையெழுத்து போட்டு பணம் கட்டியுள்ளார் இதனைப் பார்த்த பாக்கியா மிகவும் அதிர்ச்சியாகி உள்ளார்.

மேலும் கோபியும் ராதிகா விடம் என்னை விட்டுப் போய் விடாதே நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன் என பேசியதையும் பாக்கியா கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போய் நிற்கிறார். இது போன்ற ப்ரோமோ தற்போது பாக்கியலட்சுமி சீரியலிருந்து வெளியாகி மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.