சமீபகாலமாக கிரிக்கெட் உலகில் இருக்கும் வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு அறிவிக்கின்றனர் அந்த வகையில் 28 வயதான பாகிஸ்தான் வீரரான முகமது அமீர் 2020 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார் இளம் வயதிலேயே இவர் ஓய்வு பெற்றது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தையும், மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவர் ஓய்வை அறிவிப்பதற்குமுக்கியக் காரணமாக பார்க்கப்படுவது பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை இல்லை, நிர்வாகம் அழுத்தம் கொடுத்தால் அதன் விளைவாகவே ஓய்வை அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
மேலும் தற்பொழுது இவர் தனது மனைவியுடன் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கே வசிக்கிறார் அதற்கு முக்கிய காரணம் இவரது மனைவி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி 7 ஆண்டுகளுக்கு உள்ளூர் மற்றும் CPL, SPL,BBL போன்ற T20 போட்டிகளில் விளையாட உள்ளார்.
இங்கிலாந்து குடியுரிமை வாங்கி வசிக்கும் இவர் தற்போது ஐபிஎல் விளையாட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் முஹம்மத் என்பவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான விளையாடினார்.
அதுபோல முகமது அமீரும் எப்படியாவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விளையாட ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது