சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்த நடிகர் நடிகைகள் பலர் அதிலும் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பல நடிகைகள் போட்டோ ஷூட் என்ற பெயரில் அரைகுறை ஆடையணிந்து கவர்ச்சியான வெளியிட்டு ரசிகர்களை கவர்வருவதோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரை பக்கத்திலும் வலம் வருகிறார்கள்.
ஆனால் நடிகர்களோ அதிலிருந்து மாறுபட்டவர்கள் திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் இடம் பிடிக்ன்றனர். இதை பல வருடங்களுக்கு முன்பே நிகழ்த்தி காட்டியவர் எம்எஸ் பாஸ்கர். அந்த வகையில் சின்னத்திரையில் “சின்ன பாப்பா பெரிய பாப்பா” என்ற காமெடி தொடரில் தனது அசாதாரணமான பங்களிப்பை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு படிப்படியாக வெள்ளித்திரை பக்கம் சென்று இவர் பல்வேறு படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். தற்பொழுது கூட நடித்து வருகிறார். இவர் கடைசியாக தமிழில் அம்னீசியா டு மலேசியா என்ற படத்தில் காமெடியாக நடித்து அசத்தி இருந்தார்.
சினிமாவில் இவர் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களையும் தாண்டி வேறு ஒரு தொழிலையும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். அதாவது டப்பிங் துறையில் இவர் பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். மேலும் பல்வேறு தமிழ் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இவர் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
IMBD ராங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் “தி ஷாவ் ஷாங்க் ரெடிம்சன்” எனும் திரைப்படத்திலும் எம்எஸ் பாஸ்கர் பணியாற்றியுள்ளார் அதாவது இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டது அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு அவர் டப்பிங் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.