கார்த்தியின் பையா திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? பல வருடங்களுக்குப் பிறகு லிங்குசாமி வெளியிட பரபரப்பு தகவல்

paiya
paiya

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. இவர் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் லிங்கு சாமி திரைப்படம் என்றாலே கண்டிப்பாக பார்க்கும் படி இருக்கும் என ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருந்து லிங்குசாமி ஒதுங்கி இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அஞ்சான் திரைப்படம் சறுக்கியது தான். அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் லிங்குசாமிக்கு திரைப்பயணத்தில் ஒரு சறுக்கல் ஏற்பட்டது.

ஆனால் லிங்குசாமி இதற்கு முன் எடுத்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதற்குமுன் லிங்குசாமி ஆனந்தம், பையா, வேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில்  பையா திரைப்படத்தில் நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை சமீபத்தில் ஒரு பேட்டியில் லிங்குசாமி பகிர்ந்துள்ளார். பையா திரைப்படத்தின் போது முதன்முதலில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை கமிட் செய்ய இருந்தார்களாம்.

ஆனால் பையா படத்திற்காக நயன்தாராவிடம் லிங்குசாமி சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி கேட்டாராம் ஆனால் நயன்தாரா பிடிகொடுக்காமல் முடியாது என மறுத்துள்ளார் அதன்பிறகுதான் நயன்தாராவை தூக்கி எறிந்துவிட்டு தமன்னாவை கார்த்திக்கு ஜோடியாக சேர்த்தார்கள்.

இந்த தகவலை லிங்குசாமி பேட்டியில் கூறினார். மேலும் லிங்குசாமி சில திரைப்படங்களையும் தனது சகோதரருடன் இணைந்து தயாரித்துள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி ஆகிய திரைப்படங்களை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.