பையா திரைப்படத்தில் தமன்னாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? படத்தை தவறவிட்டு வருந்திய முன்னணி நடிகை.!

paiya-tamil360newz
paiya-tamil360newz

கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் பையா இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தமன்னா நடித்திருந்தார், கார்த்திக் பெங்களூர் வருகிறார் அங்க தமன்னாவை பார்த்து ஒருதலையாக காதலிக்கிறார், பின்பு தன்னுடைய நண்பரை அழைத்து வர ரயில் நிலையத்திற்கு காரில் செல்கிறார் கார்த்தி, அப்பொழுது தவித்தபடி நிற்கும் தமன்னா கார்த்தி டிரைவர் என நினைத்து ரயில் டிக்கெட் தவறிவிட்டதால் சென்னையில் விட முடியுமா என கேட்க உடனே ஹீரோ ரேஞ்சுக்கு கார்த்தியும் உதவி செய்கிறார்.

பின்பு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும்போது தமன்னாவின் உறவினர்களை இறக்கிவிட்டு தமன்னாவை மும்பைக்கு அழைத்துச் செல்கிறார், தமன்னாவை தேடி ஒரு ரவுடி கூட்டமே பின்தொடர்கிறது, முன்விரோதம் காரணமாக கார்த்தியை ஒரு ரவுடிக் கூட்டம் தொடர்கிறது அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான கதை.

இந்த திரைப்படம் 12 கோடிகளில் எடுக்கப்பட்டு 65 கோடி வரை வசூல் ஈட்டியது, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தமன்னா கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பையா திரைப்படத்தில் நடிகையாக முதலில் நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்தது ஆனால் கால்ஷீட் காரணமாக அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை அதனால் விலகிக் கொண்டார் அதன் பிறகுதான் தமன்னாவிடம் இந்த வாய்ப்பு சென்றது. நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தாள் அவரின் ரேஞ்ச் இப்பொழுது வேற லெவலில் இருந்திருக்கும்.

நயன்தாரா தற்பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் நயன்தாரா இவ்வளவு பெரிய ஹிட் திரைப்படத்தை தவற விட்டு விட்டோமே என வருந்திய காலமும் உண்டு, நயன்தாரா தன்னுடைய திரைப்பயணத்தில் இந்த திரைப்படத்தையும் தவறவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தமன்னாவுக்கு தான் அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.