பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இப்படிக் கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டாரே என புலம்பும் ரசிகர்கள்.

paiya
paiya

2010ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாக திரைப்படம் பையா இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார், யுவன் சங்கர் ராஜா இசையில் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

படத்தின் வெற்றிக்கு பாடல் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறலாம் அந்த அளவு அனைத்து பாடலும் ஹிட்டடித்தது, இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

பையா திரைப்படத்தின் கதையை முதன் முதலில் லிங்குசாமி சூரியாவிடம் தான் கூறினாராம் ஆனால் சூர்யா இந்தப் படத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என தனக்கு வந்த வாய்ப்பை தன்னுடைய தம்பிக்காக விட்டு கொடுத்து விட்டாராம்.

சூர்யா விட்டுக்கொடுத்து ஹிட்டடித்த திரைப்படம்தான் பையா, கார்த்தி பருத்திவீரன் படத்தில் தர லோக்கலாக பட்டிக்காடா நடித்திருந்தார், தன்னால் மாடலாக நடித்து கலக்க முடியும் என இந்த திரைப்படத்தின் மூலம் நிரூபித்தார்.

சூர்யா மற்றும் கார்த்தி அகரம் பவுண்டேஷன் மூலம் யாரிடமும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார்கள்.